கடற்படை தளபதியை நியமிக்கும் விஷயத்தில் மத்திய அரசு காட்டும் அலட்சியம், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’ என்று பாஜ எச்சரித்துள்ளது. கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களில் தொடர்ச்சியாக நடந்த விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பேற்று, கடற்படை தளபதியாக இருந்த ஜோஷி கடந்த மாதம் ராஜினாமா செய்தார். ஒரு மாதத்துக்கு மேலாகியும் புதிய தளபதியை மத்திய அரசு இன்னும் நியமிக்கவில்லை.
இது பற்றி பாஜ தகவல் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ”கடந்த ஒரு மாதமாக கடற்படை தளபதி பதவி காலியாகவே இருக்கிறது. அரசு அதிகாரிகள் நியமனத்தில் மட்டும் வேகம் காட்டும் மத்திய ஐமு கூட்டணி அரசு, கடற்படை தளபதி நியமன விஷயத்தில் மட்டும் அலட்சிய அணுகுமுறையை பின்பற்றுகிறது. இந்த தாமதத்தின் காரணமாக, நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்யும் அபாயம் ஏற்படும்” என்றார்.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.