தேர்தல் அறிக்கை கீதை, குரான், பைபிளைப் போன்றது

 தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது, அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல்அறிக்கை என்பது கீதை, குரான், பைபிளைப் போன்று புனித நூலாக இருக்க வேண்டும் என்று பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், கும்ளாவில் நடைபெற்ற பா.ஜ.க தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது: காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ஏராளமான பொய்வாக்குறுதிகளை அளித்துள்ளது. 2004, 2009-ம் ஆண்டு களில் வெளியிட்ட தேர்தல் வாக் குறுதிகளை, இப்போதைய அறிக்கையிலும் தெரிவித்துள்ளனர்.

அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல்அறிக்கை என்பது கீதை, குரான், பைபிளைப் போன்று புனித நூலாக இருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, அரசியல்ஆயுதமாக இருக்கிறது. அதற்கு எந்தபுனிதமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், மக்களின் கண்களில் மண்ணைத் தூவும்படியாக உள்ளது.

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகளை பொதுமக்கள் ஒரு போதும் நம்பமாட்டார்கள். அவை அனைத்தும் பொய்யான வாக்குறுதிகள்.

இதேபோன்றுதான் 2004-ம் ஆண்டும், 2009-ம் ஆண்டும் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். விலை வாசியை குறைப்போம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பை அளிப்போம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்தனர். அதை நிறைவேற்றினார்களா?

தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றாதது குறித்து மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினால் தான், பொய்யான வாக்குறுதிகள் அளிப்பதை அரசியல்கட்சிகள் கைவிடும்.

ஆட்சியை கைப்பற்றும் கட்சி, 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேறும்போது என்னென்ன தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றியது என்பது பற்றி தேர்தல் ஆணையம் கேள்வி கேட்க கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

இந்த நாட்டில் பழங்குடியினரும் வாழ்கிறார்கள் என்பதை காங்கிரஸ் மறந்துவிட்டது. கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கட்சி, பழங்குடியினரின் நலனுக்கான அமைச்சகத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை.

வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் தான், பழங்குடியினர் நல அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. அவர்களின் மேம்பாட்டுக்காக பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கப்பட்டது.

ஜார்க்கண்ட் தனிமாநில கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, அதை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஏளனம் செய்து அலட்சியப்படுத்தினார். வாஜ்பாய் ஆட்சியில் தான் ஜார்க்கண்ட் தனி மாநிலம் உருவாக்கப்பட்டது.

ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் பல்வேறு தந்திரங்களை கையாள்கிறது. நேரத்திற்கு தகுந்தாற்போல் சிலரின் ஆதரவை அக்கட்சி பெற்றுக்கொள்கிறது.

இரும்புத்தாது, நிலக்கரி சுரங்கத்தில் காங்கிரஸ் தலைவர் கள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மின்உற்பத்தி திட் டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஊழல் நடைபெற்றுள்ளது. விற்பனை வரி, வருமானவரி என்பதைத் தான் கேள்விப்பட்டிருக்கிறோம். மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சராக ஜெயந்தி நடராஜன் இருந்தபோது, ‘ஜெயந்திவரி’ இருந்துள்ளது. அந்த வரியை செலுத்தினால் தான் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் கோப்புகள் நகர்ந்தன.

ஊழலை ஒழிக்கமுடியும். அதற்கு ஆட்சியில் உள்ள தலைவருக்கு துணிச்சலும் நேர்மையுணர்வும் தெளிவான கொள்கையும் இருக்கவேண்டும்.

மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிடவேண்டும். அந்த இயக்கத்தில் இருக்கும் இளைஞர்களின் கையில் துப்பாக்கிக்கு பதிலாக பேனாவும், உழுவதற்கான கலப்பையும் இருக்கவேண்டும் என்பதே எனது கனவு. அகிம் சையை மகாத்மா காந்தி வலியுறுத்தியுள்ளார். மாவோயிஸ்டுகள், ஆயுதங்களை கைவிட்டு வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் பந்த் நடத்திய சூழ்நிலையில், மிரட்டல்களுக்கு அஞ்சாமல் பெருமளவில் எனது கூட்டத்தில் பங்கேற்க வந்திருக்கும் உங்களுக்கு எனது நன்றி. ஜனநாயகத்தின் மீது உங்களுக்கு உள்ள நம்பிக்கையையும், துப்பாக்கியைப்பார்த்து அஞ்சாத தன்மையையும் காட்டுவதாக இது அமைந்துள்ளது” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...