சோனியா, ராகுல் ஆகியோருக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. பாஜக.,வின் மத்திய தேர்தல் குழுக்கூட்டம் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்னர் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு எதிராக, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அஜய் அகர்வால் போட்டியிடுகிறார். அமேதிதொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்து ஸ்மிரிதி இராணி களமிறக்கப்படுகிறார்.
இதேபோன்று தமிழகத்தில் வேலூர், தஞ்சை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. வேலூரில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாரதிய ஜனதாவின் சின்னத்தில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சையில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம். முருகானந்தம் போட்டியிடுவார் அறிவி்க்கப்பட்டிருக்கிறது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 8 தொகுதிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.