காங்கிரஸ் வருடம் 365 நாட்களையும் ‘ஏப்ரல் ஃபூல்’ தினமாக கொண்டாடுகிறது என்று நரேந்திர மோடி சாடியுள்ளார்.
உத்திரப் பிரதேசம் மாநிலம் பரேலியில், நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசியதாவது: “பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதுபோல, காங்கிரஸ் தேர்தல்நேரத்தில் ‘ஏழை’, ‘ஏழை’, ‘ஏழை’ என்ற மந்திரத்தை பாடுகிறது. ஆனால், ஏழைமக்கள் உணர்ந்து விட்டனர். காங்கிரஸ் 365 நாளும் முட்டாள்கள் தினத்தை கொண்டாடுகிறது என்று அவர்களுக்குதெரியும்.
ராகுல் ஏழைகளின் மீது அக்கறை உள்ளதுபோல பாவனை செய்துவருவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். செல்வந்தராக பிறந்த ராகுலுக்கு ஏழைஎன்றால் தெரியுமா அல்லது வறுமை என்றால் புரியுமா?
ஐ.மு.,கூட்டணி ஆட்சியின் போது நாட்டில் ராணுவவீரர்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் புறக்கணிக்கப்பட்டனர். விவசாயிகள் தற்கொலைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். ஏழைமக்களுக்கு சென்றடைய வேண்டிய தானியங்களை கிடங்குகளில் அடைத்துவைத்து பாழாக்கச்செய்தது காங்கிரஸ் அரசு. உச்சநீதிமன்றம் அந்த தானியங்களை ஏழைகளுக்கு விநியோகிக்கும்படி கேட்டப்போது காங்கிரஸ் அரசு அதனை செய்யவில்லை.
காங்கிரஸ்கட்சி 2009 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறியது. ஆனால், அவர்கள் அதனை செய்யவில்லை. ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது விவசாயிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது” என்றார் மோடி.
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
Leave a Reply
You must be logged in to post a comment.