சுதந்திரத்திற்கு பிறகான 16வது பொதுத்தேர்தலுக்கு நாடு தயாராகி விட்டது. 1947 ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த இந்தியா, பாராளுமன்ற ஜனநாயகத்தை தன் அரசு அமைப்பாக ஏற்று 1950ல் அரசியலமைப்பை உருவாக்கிகிக்கொண்டு பின்னர் முதல் பொதுத்தேர்தலை 1952ம் ஆண்டு நடத்தியது.
ஃபார்சூன் பத்திரிக்கையின் இந்தியப்பதிப்பில் முதுநிலை ஆசிரியரான ஸ்ரீ.ஹிந்தால் சென்குப்தா, ஐடியாமென்ஷ் எனும் உலகளாவிய சிந்தனைகளின் மேடை எனும் அமைப்பு, இவரையும் தேர்ந்தெடுத்து, தன் 'உலகத்தை நல்லிடமாக்கும் 32 தொழில் முனைவர்கள்' பட்டியலில் சேர்த்திருக்கிறது. இவர் 'வாக்களிக்குமுன்பு அறிந்துகொள்ள, விவாதிக்க வேண்டிய 100 அம்சங்கள்' என்ற தலைப்பில் தற்போது ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
படிப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும், இந்தியாவைப்பற்றிய ஒரு புள்ளிவிவர தொகுப்பாகும் இந்நூல்.
உதாரணத்திற்கு, ஒன்றாக பட்டியலிடப்பட்டிற்கும் 100 விஷயங்களில், 37வது விஷயம் இது. '37. அவசியப்பட்டால் சிறுநீரகத்தை விற்றுவிடு' எனும் தலைப்பில் உள்ள அரைப்பக்க குறிப்பு சொல்கிறது:
"மனித உறுப்பு மாற்று சட்டம், 1994 இருந்தாலும், இந்தியாவின் கருப்பு சந்தையில் உறுப்பு மாற்று தொழில் 'உயிர்த்தெழுகிறது' என்கிறது உலக சுகாதார நிறுவனம். பெரும்பாலும் ஏழை உள்ளூர் கொடையாளிகளிடமிருந்து, அற்பத்தொகையை ($ 130,000 – $ 150,000 வரையிலான வியாபாரத்தில், சில சமயம் வெறும் $5000 மட்டுமே) கொடுத்து தானம் பெறப்படுகிறது.
தன்னார்வ ஆரோக்கிய சங்கத்தின் மதிப்பீட்டின்படி, ஆண்டுக்கு 2000 இந்தியர்கள் தங்கள் சிறுநீரகத்தை விற்கிறார்கள்.இன்னும் ஏழைகள் தங்கள் உறுப்புக்களை விற்கும் நிலையில் எப்படி நாம் வளர்ச்சியின் அடிப்படையில் தேர்தலை நடத்த முடியும்?"
மனிதக்கழிவின் சங்கதிகள் எனும் தலைப்பில் 25வது அம்சம் விவரிக்கிறது: "இந்தியாவின் முன்னணி சுதந்திர ஆராய்ச்சி அமைப்பான அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம்(CSE), 'மனிதக் கழிவு கவனிக்கப்பட வேண்டியதே!' என்ற, கழிவுகளை கையாள்வது பற்றிய தன் அதிகாரபூர்வ ஆய்வறிக்கையை கோபமான வார்த்தைகளில் விவரிக்கிறது. இந்தியாவின் 80 சதவீத – ஆம் 80 சதவீத சாக்கடை, குடிநீரின் முக்கிய ஆதாரமான நதிகளில் எந்தவித சுத்திகரிப்பும் செய்யப்படாமல் கலக்கவிடப்பட்டு அசுத்தமாக்கப்படுகிறது.
இது எதை குறிக்கிறது? சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீரில் கலக்கிவிடப்பட்டு பின்னர் குடிநீராக நமக்கே திரும்புகிறது. இந்திய நகரங்கள் வெளியேற்றும் 4,00,000 லட்சம் லிட்டர் கழிவுநீரில் சுமார் 20 சதவீதம் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் 2011ம் ஆண்டு அளவீட்டின்படி, 8,000 இந்திய சிறுநகரங்களில் வெறும் 160ல் மட்டுமே கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியுடன் உள்ளது.
CSE இதை ஆரோக்கியத்திற்கு வைக்கப்பட்ட 'டைம் வெடிகுண்டு' டிக் டிக் என துடிக்க தொடங்கிவிட்டது. CAG மேலும் ஒரு சீரழிவை விவரிக்கிறது – டெல்லியின் கழிவில் வெறும் 62 சதவீதம் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது, பெங்களூரு தன் கழிவில் 10 சதவீதமும், பட்னா 29 சதவீதமும், கான்பூர் 38 சதவீதமும், ஹைதராபாத் 43 சதவீதமும் சுத்திகரிக்கின்றன. அஹமதாபாத் மட்டும்தான் தன் எல்லா கழிவையும் சுத்திகரிக்கும் வசதியை கொண்டுள்ளது. அசுத்த நீரால் பரவும் டெங்கு வியாதியை நினைத்துக்கொள்ளுங்கள். கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையங்களை அதிகரிப்போம் என்று தேர்தல் பேச்சுக்களில் எங்காவது கேட்டுள்ளீர்களா? "
பட்டியலின் 31வது அம்சத்தின் தலைப்பு: '31.உணவும், அழுகலும்'. அந்தக்குறிப்பு விவரிப்பது: "2013ல் நான் படித்த மிகவும் கவர்ந்த ஒரு ஆய்வறிக்கை, 'உலக உணவு – வீணாக்காதீர், விரும்பாதீர்' எனும் இயந்திரவியல் பொறியாளர்கள் நிறுவனத்தின் ஒரு உலகளாவிய அறிக்கைதான்.
ஆண்டுதோறும் 210 லட்சம் டன் கோதுமையை பராமரிப்பின்மையால் இந்தியா வீணடிக்கிறது. இது ஆஸ்திரேலியாவின் ஆண்டு உற்பத்திக்கு இணையாகும்.நம் நாட்டில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் 40 சதவீதம் வீணடிக்கப்படுகிறது. சரியான சேமிப்பு வசதியின்மையாலேயே இவ்விழப்புக்கள்."
புத்தகம் குறிப்பிடும் மற்றொரு அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரம், 'சாலை விபத்துக்கள்'.'உலகில் இந்தியாவில்தான் சாலை விபத்துக்களில்தான் உயிரிழப்போர் அதிகம்'. மேலும், '2009 முதல் 2011க்கு இடையில் இந்தியாவில், விபத்து மரண விகிதம் ஒரு லட்சம் பேருக்கு, 16.8 லிருந்து 18.9 ஆக உயர்ந்துள்ளது' என்கிறது உலக சுகாதார நிறுவனம் (WHO).
எண்ணிக்கையில் பார்த்தோமானால், 2011ம் ஆண்டு 4,40,123 சாலை விபத்துக்களில் 1,36,834 பேர் மரணமடைந்துள்ளனர். 2001க்கும் 2011க்கும் இடையில் இந்திய சாலைகளில் ஏற்படும் விபத்துக்களில் உயிரிழப்பு விகிதம் 44.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த கணத்தில், 5 நிமிடத்திற்கொரு சாலை விபத்து மரணம் நிகழ்கிறது. 2020ல் இது 3 நிமிடத்திற்கொரு மரணமாக உயரக்கூடும்." 100 அம்ஸங்களில் 70வதாக வருவது: 'பெண்களின் மோசமான வாழ்விடம் இந்தியாதான்'. இந்த தலைப்பில் விவரிக்கப்படுவது:
"பணக்கார G20 நாடுகளின் வாக்கெடுப்பில் 2013ன் பெண்களுக்கு மோசமான வாழ்விடம் இந்தியாதான் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தாம்சன் ரய்ட்டர்ஸ் அமைப்பின், சட்டத்துறை செய்தி சேவையின், 'டிரஸ்ட் லா' (TrustLaw), எடுத்த சர்வேயின்படி, உலகளாவிய 370 வல்லுனர்கள் சேர்ந்து எடுத்த முடிவில் இந்தியாவிற்கு சௌதி அரேபியாவிற்கு கீழான இடம்தான் அளிக்கப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவதில்லை என்பதும், 2011ல் தான் வாக்களிக்கவே உரிமை பெற்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலிடம் கனடாவிற்கும், தொடர்ந்து ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரலியா மற்றும் ஃப்ரான்ஸ்.
பெண்களுக்கெதிரான எல்லா காரணங்களும் இந்தியாவில் உள்ளது என்றும் குறிப்பிடுகிறது. வரதட்சிணை கொலைகள், கருக்கலைப்புகள் மற்றும் பெண் கருக்கலைப்புகள், பெண் குழந்தைக்கொலைகள், தினசரி சித்ரவதை, பாலியல் கொடுமைகள், பலாத்காரங்கள் போன்றவை இந்தியாவை மோசமான பாதுக்காப்பாற்ற வன்முறை இடங்களில் ஒன்றாக தேர்வு செய்ய வைத்தது.
எல்லா BRICS நாடுகளும் இந்தியாவிற்கு மேலேயே இருக்கிறது – பிரேசில் 11ம் இடம், ருஷியா 13, சீனா 15, தென் ஆப்ரிக்கா 17. இந்தோனேஷியா கூட 18ம் இடத்தில் மேலே இருக்கிறது."
64வது அம்சம், 'தகவல் தொழில்நுட்ப விகிதம்' பிரச்னைகளை விவரிக்கும் குறிப்புகள்:
"2013ம் ஆண்டு உலக தகவல் தொடர்பு கூட்டமைப்பு, 157 நாடுகளில், இந்தியாவிற்கு 121வது இடம் வழங்கியுள்ளது என்பது நாம் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தில் (ICT), எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதை காட்டுகிறது.
தகவல் தொழில்நுட்ப வியூகத்திற்கு நன்றிகள்.
தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) வளர்ச்சி குறியீட்டின் 11 குறியீடுகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் 100 பேருக்கு இணையவசதி, கம்பியில்லா மற்றும் இணைய அலைவரிசை விற்பனையின் ஆழம், கைப்பேசி சந்தாக்கள் மற்றும் ஒவ்வொரு இணைய பயன்பாட்டாளரின் அலைவரிசை உபயோகம் போன்ற அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன.
பிராட்பேண்ட் கமிஷன் ஃபார் டிஜிட்டல் டெவலப்மெண்ட் அறிக்கையில் 200 நாடுகளில் இந்தியாவிற்கு 145வது இடம்தான் கிடத்துள்ளது.
சொல்லப்போனால், குறைந்த தொடர்பு வசதிகளே உடைய 39 நாடுகள் கொண்ட குழுவில் இந்தியாவும் ஒன்று. பெரும்பாலான மற்ற நாடுகள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவை."
கடைசி துணுக்கு
28வது அம்ஸத்தின் தலைப்பு, 'தேதிக்குப்பின் தேதிக்குப்பின் தேதி' அந்தக்குறிப்பு:
"ஹிந்திப்படம் தாமினி பார்த்துள்ளீர்களா? அதில் சன்னி தியோல் நேர்மையான, முரட்டு, அதிகம் வெற்றிகளை பெறாத வழக்கறிஞராக வந்து ஒரு வழக்கை நடத்துவார்.
மறக்க முடியாத வசனங்கள் அப்படத்தில் இருக்கும். அதில் ஒன்று தியோல் பேசும் வசனம், "இரண்டரை கிலோ எடையுள்ள என் கை ஒருவன் மேல் விழுந்தால், அவன் எழுந்திரிக்க மாட்டான். மேலே போயி விடுவான்!"
மற்றொன்று நீதியமைப்புக்கு எதிரான கோப வசனம். ஒரே வழக்கிற்கு வருடக்கானக்காக வாய்தா. தேதி. பின் இன்னொரு தேதி. பின் இன்னொன்று. எதிரொலிதான் ஆனால் நீதி இல்லை.
300 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளது. அதில் 80 சதம் கீழ்கோர்ட்டுகளில். உயர்நீதிமன்றங்களில் 40 லட்சமும், உச்சநீதிமன்றத்தில் 66000 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தேசிய நீதிமன்ற நிர்வாக அமைப்பு சொல்கிறது: தற்போது 19,000 நீதிபதிகள் உள்ளனர். அதில் 18,000 பேர் விசாரணை நீதிமன்றங்களில். சில சிவில் வழக்குகள் 15 ஆண்டுகள் வரை இழுப்பதுண்டு. கடந்த 30 ஆண்டுகளில், நீதிபதிகளின் எண்ணிக்கை 6 மடங்காக உயர்ந்துள்ளது, ஆனால் வழக்குகளோ 12 மடங்காக உயர்ந்துவிட்டது!
அடுத்த 30 ஆண்டுகளில், 75,000 நீதிபதிகள் தேவைப்படுவார்கள். ஏனென்றால் வழக்குகள் 1500 லட்சமாக உயரும்.
அவர்கள் எங்கிருந்து வருவார்கள் என்று யாருக்கும் தெரியாது. சிக்கலை தீர்க்க யாரிடமும் தெளிவான திட்டமும் இல்லை."
நன்றி; ஸ்ரீ.L.K.அத்வானி
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.