40 நாட்களுக்கு பிறகு பாஜக., வை பற்றி விமர்சித்துள்ளது, அதிமுக. பின்னோக்கி செல்வதையே காட்டுகிறது

 தேர்தல் அறிவித்து 40 நாட்களுக்கு பிறகு பாஜக., வை பற்றி முதல்வர் ஜெயலலிதா விமர்சித்துள்ளது, அதிமுக. பின்னோக்கி செல்வதையே காட்டுகிறது,” என்று , பா.ஜ., மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி நேற்று நாகர்கோவிலில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு கன்னியா குமரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளரும், மாநில பா.ஜ.க தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

அம்பேத்காரின் தியாக மனப் பான்மையை கருத்தில்கொண்டு, அவரது வழியில் நரேந்திரமோடி செயல்படுகிறார். அடுத்த பத்து ஆண்டுகளில் அடித்தட்டு மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வின் நிலையை உயர்த்த பாடுபடுவேன் என்று அவர் உறுதிபூண்டுள்ளார். அடுத்து உருவாக இருக்கிற நரேந்திர மோடி அரசு அம்பேத்காரின் லட்சியத்தை சுமந்துசெல்லும் அரசாக இருக்கும்.

நரேந்திர மோடி வந்துசென்றது அரசியலில் புதிய சரித்திரத்தையும், புதிய அத்தியாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரஜினி காந்தை மோடி சந்தித்ததும், மோடியுடன் ரஜினி காந்த் உரையாடியதும் அவர்களுக்கு இடையே உள்ள அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மோடிமீது ரஜினி காந்த் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் 40 நாள் பிரசாரத்தைமுடித்த நிலையில் பா.ஜ.க பற்றி ஜெயலலிதா விமர்சனம் செய்திருப்பது, அதிமுக. பின்னோக்கி செல்வதையே காட்டுகிறது.

வருகிறகாலம் தமிழ்நாட்டுக்கு மறு மலர்ச்சி ஏற்படுகிற காலமாகும். உலகதமிழர்களின் நலனை பாதுகாப்பது இந்திய அரசின் கடமை என்று நரேந்திர மோடி சொல்லியிருப்பது நிச்சயம் நிறைவேறும் என்று கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...