பா.ஜ.க கூட்டணி தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனை

 பாஜக கூட்டணி தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை, தமிழகத்தைப் பொறுத்தவரை 60 சதவீதம் பேர் மோடி பிரதமராக ஆதரவு தெரிவித்துள்ளதாக பல கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. என்று பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான கூட்டணி, இந்த தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள்?

பா.ஜ.க கூட்டணி தமிழக அரசியலில் திருப்பு முனையை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தொடக்கத்தில் ஆளும்கட்சியான அ.தி.மு.க.,வும், ஆண்டகட்சியான தி.மு.க.,வும் பா.ஜ.க.,வை கண்டு கொள்ளவில்லை. வலுவான போட்டியை ஏற்படுத்த மாட்டோம் என நினைத்தார்கள். ஆனால், மோடி அலையின் முன் எல்லாம் தூள் தூளாகிவிட்டது. அனைவரின் அம்புகளும் பா.ஜ.க.,வை நோக்கிதான் பாய்கின்றன. இதன் மூலம் பா.ஜ.க கூட்டணி தான் முதல் அணி என்பது உறுதியாகி விட்டது.

கருத்து கணிப்புகள் பாஜக அணிக்கு 3வது இடம்தான் கிடைக்கும் என்கிறதே?

தமிழகத்தை பொறுத்தவரை 60 சதவீதம்பேர் மோடி பிரதமராக ஆதரவு தெரிவித்துள்ளதாக பல கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க, தி.மு.க அணிகளைவிட பாஜகவுக்கு ஆதரவு அதிகம் இருப்பதாக பலகணிப்புகள் சொல்கின்றன. பிரசாரத்தின் போது நாங்களும் அதனை உணர்கிறோம். குக்கிராமங்களில் கூட மோடியை மக்கள் அறிந்திருக்கிறார்கள்.

சிறந்த நிர்வாகிமோடி அல்ல, இந்த லேடிதான் என முதல்வர் ஜெயலலிதா சவால் விடுத்துள்ளாரே?

மோடி சிறந்தநிர்வாகி என்பதால்தான் குஜராத் மக்கள் அவரை நான்காவது முறையாக முதல்வராக்கி இருக்கிறார்கள். தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ந்து 2-வது முறையாக யாரும் வென்றதில்லை. மோடியின் பெருமையை உணர்ந்த கோடிக்கணக்கான மக்களும், இளைஞர்களும் அவருக்கு மகுடம் சூட்ட தயாராகி விட்டார்கள்.

பாஜக குஜராத் வளர்ச்சியை முன்வைக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் அது வெறும்மாயை என்கிறார்களே?

குஜராத்தின் வளர்ச்சி அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளை திரும்பிபார்க்க வைத்துள்ளன. டைம்ஸ் போன்ற உலக பத்திரிகைகள் வியந்து பாராட்டுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் விருதுகளை அதிகமாகப்பெற்ற மாநிலம் குஜராத். மோடி அலையால் அடித்து செல்லப்படுவோம் என்ற அச்சத்தால் இப்போது குஜராத்வளர்ச்சி மாயை என்கிறார்கள். ஆனால், மக்களிடம் இது எடுபடாது.

ரஜினி, விஜய்யை மோடி சந்தித்தது பா.ஜ.க அணிக்கு தேர்தலில் பலன்கொடுக்குமா?

ரஜினியும், விஜய்யும் என்ன நினைக்கிறார்களோ, அதனை நிறைவேற்றக்கூடிய லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர்களுக்கு இருக்கிறார்கள். மோடி எதற்காக உழைக்கிறார்களோ அது நிறைவேற வாழ்த்துவதாக இருவரும் கூறியுள்ளனர். இதன் அர்த்தத்தை அவர்களது ரசிகர்கள் உணராதவர்கள் அல்ல.

பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இலங்கை பிரச்னை, மீனவர் பிரச்னை, நதி நீர் பிரச்னைகள் குறித்து எதுவும் சொல்லப்பட வில்லையே?

பாஜக ஆட்சிக்குவந்தால் மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும், நவீன தொழில் நுட்பம் மூலம் மீன்பிடித்தொழில் மேம்படுத்தப்படும் என மோடி உறுதி அளித்துள்ளார். வாக்குகளை பெறுவதற்காக எதிர்க் கட்சிகள் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...