தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துள்ளது. மக்கள் உற்சாகத்துடன் வந்து வாக்களிப்பதை காணமுடிந்தது. மக்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது ஒருமாற்றம் தேவை என்பதும், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டிருப்பதும் தெரிகிறது என்று நாகர்கோவிலில் வாக்களித்த பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க மாநில தலைவரும், கன்னியா குமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–
தமிழகம்முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துள்ளது. மக்கள் உற்சாகத்துடன் வந்து வாக்களிப்பதை காணமுடிந்தது. மக்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது ஒருமாற்றம் தேவை என்பதும், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டிருப்பதும் தெரிகிறது.
தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி இந்ததேர்தலில் மிகப்பெரும் வெற்றியை பெறும். கடந்த நான்கைந்து நாட்களாக தமிழக மக்களை ஆடு, மாடுகளை விலைக்கு வாங்குவதை போன்று ஆளும் கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் பணம்கொடுத்து விலைக்கு வாங்கப்பார்க்கின்றனர். ஆளும்கட்சியினர் ஓட்டுக்கு ரூ.500 வீதம் கொடுப்பதாகவும், அதற்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியினர் பணம்கொடுப்பதாக புகார் வந்துள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது தேர்தல் ஆணையம் தேவைதானா? என்ற நிலை உருவாகியுள்ளது.
தமிழக காவல் துறை கடந்த 3 நாட்களாக செயல்பட வில்லை. பணம்கொடுப்பதாக தகவல் கொடுத்தால், அந்த தகவல் பணம் கொடுப்பவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து அவர்கள் சென்ற பிறகு அதிகாரிகள்போய் பார்க்கிறார்கள். இதற்கு மக்கள் தகுந்தபாடம் புகட்டுவார்கள்.
கன்னியாகுமரி தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி. லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெறுவேன். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் அதிகப்படியான இடங்களில் வெற்றிபெறும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.