ஸ்ரீ வெங்கடாஜலபதியை மே 1ம் தேதி வழிபாடு செய்யும் மோடி

 திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதியை பாஜக. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி மே 1ம் தேதி வழிபாடுசெய்கிறார்.

இதற்காக, ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 30ம்தேதி திருப்பதி நகரை வந்தடையும் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் தேர்தல்பிரசார கூட்டத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகர் பவன்கல்யாணுடன் ஒரேமேடையில் பேசுகிறார்.

சந்திரபாபு நாயுடுவுடன் புதன் கிழமை மாலை திருமலையை வந்தடையும் மோடி, அன்றிரவு திருப்பதி-திருமலை தேவஸ்தான விருந்தினர்மாளிகையில் தங்குகிறார். பின்னர், வியாழக் கிழமை அதிகாலை கோயிலுக்கு சென்று சிறப்புவழிபாடு செய்கிறார்.

மோடியின் வருகையை முன்னிட்டு சித்தூர்மாவட்ட பாஜக.வினரும், தெலுங்குதேசம் கட்சி தொண்டர்களும் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.

திருப்பதி நகரம், ஸ்ரீவெங்கடாஜலபதி கோயிலின் நுழைவுவாயிலான அலிப்ரி, திருமலை மற்றும் கோயிலின் சுற்றுப்புறத்தில் செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினர் ஆய்வுசெய்து வருகின்றனர்.

சாமி தரிசனத்துக்கு பிறகு திருப்பதியில் இருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் உள்ள மதனப் பள்ளியில் நடைபெறும் பிரசார கூட்டத்திலும் மோடி பேசுகிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...