பாஜக 300க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று தனிப் பெரும் பான்மையுடன் ஆட்சியமைக்கும்

 பாஜக 300க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று தனிப் பெரும் பான்மையுடன் மத்தியில் ஆட்சியமைக்கும் என பாஜக மூத்த தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஹைதராபாதில் செய்தியாளர்களுக்கு சனிக் கிழமை பேட்டியளிக்கையில் அவர் இதை தெரிவித்தார். அவர்மேலும் கூறியதாவது:

“”சீமாந்திரம் மற்றும் தெலங்கானாவில் பா.ஜ.க-தெலுங்கு தேசம் கூட்டணிக்கு நல்ல வெற்றிவாய்ப்பு உள்ளது. எனவே மத்தியிலும் மாநிலங்களிலும் இந்த கூட்டணி ஆட்சியைபிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எங்களுக்கு 300க்கும் அதிகமான மக்களவை தொகுதிகளில் வெற்றிகிடைக்கும் என்பதால்  நாங்கள் வேறுகட்சிகளின் உதவியை பெற்றுத்தான் மத்தியில் ஆட்சி அமைக்கவேண்டும் என்ற நிலைவராது. தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக போன்ற கட்சிகள் நாங்கள் ஆட்சியமைக்க ஆதரவு தர தயார் என்றால் அந்த ஆதரவை ஏற்போம். தாமாகமுன்வந்து எங்களை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அதை நாங்கள் தடுக்க மாட்டோம். அதேசமயம் நாங்களாக சென்று யாரிடமும் ஆதரவு கேட்கமாட்டோம். ஏனெனில் அந்தநிலை எங்களுக்கு ஏற்படாது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில் என்ன நடக்கிற்து என்பதை அறிய உலகநாடுகள் பலவற்றில் உள்ளவர்கள் ஆவலாக இருக்கின்றனர். அப்படியிருக்கும்போது மோடி பிரசாரபேரணி நடத்த தேர்தல் ஆணையம் அனுமதிமறுத்தது பாரபட்சமான செயல். மற்ற கட்சிகளுக்கு அத்தகைய அனுமதி தரும்போது எங்களுக்கு தர மறுப்பது என்ன நியாயம்?” என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...