பாஜக பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பிடிக்கும்; கருத்து கணிப்புகள்

 நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாத தேர்தல்பணிகள் மற்றும் ஓட்டுப் பதிவு இன்று மாலையுடன் முடிந்தது. இதனையடுத்து டைம்ஸ் நவ், ஹெட்லைன்ஸ் டுடே, ஐபிஎன்.லைவ், என்.டபுள்யூ எஸ், சி வோட்டர் ஆகியோர் தங்களின் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டனர். இதில்

மத்தியில் பாஜக ., தலைமையில் அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று ஹெட்லைன்ஸ் டுடே தெரிவித்துள்ளது. இதன்படி 272 க்கும் மேல் 11 தொகுதிகள் கூடுதல்பெறும் என்றும் கூறியுள்ளது.

சி.என்.என்., லைவ் டிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணி,240 முதல் 282 தொகுதிகளில் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் தொலைக் காட்சி, பாஜக ., கூட்டணிக்கு 249 தொகுதிகளும், காங்கிரஸ்., கூட்டணிக்கு 148 தொகுதிகளும், என்.டி,வி., தொலைக் காட்சியில் தே.ஜ.,வுக்கு 283 தொகுதிகளும், காங்கிரஸ்., கூட்டணிக்கு 99 சீட்களும் கிடைக்கும் என கூறியுள்ளது.

இதன் படி பாஜக.,வுக்கு பல்வேறு மாநிலங்களில் அமோக வெற்றிவாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த தேர்தலைவிட பாஜக.,வுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிஎன்என். தொலைக் காட்சி வெளியிட்ட கணிப்பில்; மணிப்பூர் பஞ்சாப், அரியானா, இமாச்சல் பிரதேசம் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதில் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ., செல்வாக்கு உயர்ந்துள்ளது.டில்லியில் பா.ஜ.,வுக்கு 7 தொகுதிகள்; காங்கிரசுக்கு-0 ஆம்ஆத்மி;2 கிடைக்கும் என கூறியுள்ளது.

என்டபிள்யுஎஸ்-சி வோட்டர்: என்டபிள்யுஎஸ்-சி ஓட்டர் கருத்துக்கணிப்பில், அ.தி.மு.க., 27 தொகுதிகளிலும், தி.மு.க., 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதிகளிலும், பா.ஜ., கூட்டணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் – மேற்குவங்கம்: சிஎன்என். ஐபிஎன்.லைவ் தொலைக் காட்சி வெளியிட்ட கணிப்பில் மேற்குவங்கத்தில் மொத்தம் 42 சீட்களில் 25 முதல் 31 தொகுதிகள்வரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், இடதுசாரிகள் கட்சிக்கு 7 முதல் 11 சீட்டுகளும் , கிடைக்கும் . அதிமுக., 22 முதல் 28, தொகுதிகளும், திமுக,7 முதல் 7 முதல் -11 தொகுதிகளும் , காங்கிரசுக்கு- 0 கிடைக்கும் என கூறியுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடே: அ,தி.மு.க., -24 , தி.மு.க,. 14 கருத்துக்கணிப்பு : தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு -5 முதல் 6 காங்.,-1

டைம்ஸ் நவ் டி.வி.,: டில்லியில் பாஜக.,வுக்கு 7 தொகுதிகள்; காங்கிரசுக்கு-0 ஆம் ஆத்மி;2 கிடைக்கும். அ.தி.மு.க., 31, தி.மு.க.,- 7 காங்.,1, பா.ஜ.,0

உத்திரபிரதேசம்: ஐ.பி.என்.,லைவ் கருத்துக்கணிப்பில், உ. பி.,மாநிலத்தில் பா.ஜ., கூட்டணிக்கு 45 முதல் 53 தொகுதிகளும், சமாஜ்வாடி கட்சிக்கு 13 முதல் 17 தொகுதிகளும், பகுஜன்சமாஜ்கட்சிக்கு 10 முதல் 14 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு, 3 முதல் 5 தொகுதிகளும் கிடைக்கும்.

டைம்ஸ்நவ் தொலைக்காட்சியில், உ பி. ,மாநிலத்தில் பா.ஜ., வுக்கு 52 தொகுதிகளும் , காங்கிரசுக்கு 10 தொகுதிகளும் கிடைக்கும். மகாராஷ்ட்டிராவில் காங்கிரஸ் கட்சிக்கு 21 தொகுதிகளும் , டைம்ஸ்நவ் தொலைக்காட்சி நாடு முழுவதும் பா.ஜ.,தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு 249 தொகுதிகளும், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 148 தொகுதிகளும் ஏனைய கட்சிக்கு 146 தொகுதிகளும் கிடைக்கும் என கூறியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா, சீமந்திரா பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக் கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரிக்கப்பட்டு தேர்தல் நடந்த தெலுங்கானா, பகுதியில் ,தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி ( சந்திரசேகர ராவ் ) கட்சிக்கு 8 முதல் 12 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல் 5 தொகுதிகளும், பா.ஜ.,வுக்கு 2 முதல் 4 தொகுதிகளும் கிடைக்கும்.

சீமந்திரா பகுதியில், பா.ஜ.,வுக்கு 11 முதல் 15 தொகுதிகளும், ஓய்.எஸ்.ஆர்., காங்கிரசுக்கு 11 முதல 15 தொகுதிகளும் கிடைக்கும்.

ஆஜ்தத் தொலைக்காட்சி கணிப்பில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு 261 முதல் 283 தொகுதிகளும், காங்கிரசுக்கு 110 முதல் 120 தொகுதிகளும் ஏனைய கட்சிகளுக்கு 150 முதல் 162 தொகுதிகளும் கிடைக்கும்.

சி.என்.என்., லைவ் டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணி,240 முதல் 282 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. பா.ஜ, தனிப்பட்ட முறையில், 230 முதல் 242 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 92 முதல் 102 தொகுதிகளிலும், காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் 72 முதல் 82 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.

 

டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவில் பா.ஜ., கூட்டணிக்கு 249 தொகுதிகள் வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 148 தொகுதிகள் வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 146 தொகுதிகள் வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

என்.டி.டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு, முடிவில், பா.ஜ., கூட்டணிக்கு 283 தொகுதிகள் வரையிலும், காங்கிரஸ் கூட்டணிக்கு 99 தொகுதிகள் வரையிலும், மற்ற கட்சிகள் 161 தொகுதிகள் வரையிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியா டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பில், பா.ஜ.,கூட்டணிக்கு 317 தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும், காங்கிரஸ் கூட்டணி 104 தொகுதிகள் வரையிலும், மற்ற கட்சிகள் 122 தொகுதிகள் வரையிலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஏ.பி.பி., நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், பா.ஜ.,கூட்டணிக்கு 278 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 93 தொகுதிகளும், மற்ற கட்சிகளுக்கு 178 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஜீ நியூஸ் டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பா.ஜ.,கூட்டணிக்கு 299 தொகுதிகள் வரையிலும், காங்கிரஸ் கூட்டணிக்கு 112 தொகுதிகள் வரையிலும், மற்ற கட்சிகள் 122 தொகுதிகள் வரையிலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியா நியூஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், பா.ஜ.,கூட்டணிக்கு 315 தொகுதிகளும்,காங்கிரஸ் கூட்டணி 80 தொகுதிகள் வரையிலும், மற்ற கட்சிகள் 148 தொகுதிகள் வரையிலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...