பயங்கரவாதச் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும்

 பாகிஸ்தான் மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிராக தூண்டி விடப்படும் பயங்கரவாத செயல்களை தடுத்துநிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை இந்திய பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையில் பாகிஸ்தான் சுணக்கம்காட்டி வருவது கவலை தருவதாகவும் நரேந்திர மோடி, ஷெரீஃப்பிடம் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் பாகிஸ்தான், இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஏற்கெனவே அளித்த உறுதி மொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுஷ்மாஸ்வராஜ், வெளியுறவு துறை செயலர் சுஜாதா சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

இருநாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை குறித்து இந்திய வெளியுறவுத் துறைசெயலர் சுஜாதா சிங் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

பாகிஸ்தான் மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிராக தூண்டி விடப்படும் பயங்கரவாத செயல்கள் குறித்த தனது கவலையை அந்நாட்டு பிரதமர் நவாஸ்ஷெரீஃப்பிடம், பிரதமர் நரேந்திரமோடி எழுப்பினார். பயங்கரவாத செயல்களுக்கு நாங்கள் ஒரு போதும் இடம் தர மாட்டோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் துணை நிற்போம் என்று பாகிஸ்தான் ஏற்கெனவே இந்தியாவிடம் உறுதியளித்துள்ளது. அதை பின் பற்றி நடக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்சம்பவம் தொடர்பான விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் போதியமுனைப்பு காட்டாமல் இருப்பது கவலை தருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இருநாட்டு உறவுகளை பலப் படுத்துவது, வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிப்பது குறித்தும் இருநாட்டு தலைவர்களும் பேசினர்.

இரு நாடுகளிடையேயான அமைதி பேச்சுவார்த்தையை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது தொடர்பாக இரு நாடுகளின் வெளியுறவுத் துறை செயலாளர்கள் பேசி முடிவுசெய்வது என்று நவாஸ் ஷெரீஃப்பும், மோடியும் ஒப்புக்கொண்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...