நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும் வகையில், முக்கியமான 10 திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பிரதமராக பதவி ஏற்ற முதல் நாளில் இருந்தே நரேந்திர மோடி பரபரப்பாக செயலாற்ற துவங்கி விட்டார். தனது தேர்தல் பிரசாரத்தின்
போது, நாட்டுமக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தாரோ, அதை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் கவனம் செலுத்திவருகிறார். முதற்கட்டமாக, தனது செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அமைச்சரவையை அமைத்துள்ளார். அடுத்ததாக, தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டிற்கு மிகமுக்கிய தேவையான திட்டங்களை தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
அந்த 10 முன்னுரிமைகளாவன:
1.மக்களிடையே அதிகாரிகள் பற்றிய நம்பிக்கையை வளர்த்தெடுத்தல்.
2. புதிதான கருத்துக்கள் மற்றும் சுதந்திரமாக பணியாற்றுதலை வரவேற்பது.
3. கல்வி, சுகாதாரம், நீராதாரம், எரிசக்தி, சாலைகள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்தல்.
4. அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் மின் ஏலத்தை வளர்த்தெடுத்தல்.
5. அமைச்சகங்களுக்கு இடையிலான விவகாரங்களைக் கவனிக்க சிறப்பு ஏற்பாடு.
6. அரசு எந்திரத்தில் மக்கள் நலனுக்கான அமைப்பை ஏற்படுத்துதல்.
7. பொருளாதார விவகாரங்களுக்கு உடனுக்குடன் முன்னுரிமை அளித்தல்.
8. உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுச் சீர்திருத்தங்கள்.
9.அரசின் கொள்கையை குறித்த காலத்தில் செய்து முடித்தல்.
10. அரசுக் கொள்கைகளில் நிலையான போக்கைக் கடைபிடித்தல் மற்றும் திறமையாக செயல்படுதல்.
இந்த 10 முன்னுரிமைகளை பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.