நரேந்திர மோடியின் கனவு திட்டமான குஜராத்தில் உள்ள 'கிப்ட் சிட்டி' புராஜெக்ட்டுக்கு 5 தேசியவங்கிகள் இணைந்து சுமார் ரூ.1,157 கோடி நிதியளிக்க முன்வந்துள்ளன. 'குஜராத் இண்டர்நேஷனல் பைனான்ஸ் டெக் சிட்டி' என்ற "GIFT CITY" திட்டம் உலகவர்த்தக நாடுகளான கருதப்படும் லண்டன், சிங்கப்பூர், ஹாங்காங் , துபாய் ஆகியவற்றிற்கு இணையாக உருவாக்கப்படுகிறது ,
பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்தபோது 2007ம் ஆண்டில் இத்திட்டம் அறிமுக படுத்தபட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.
காந்திநகர் மற்றும் அகமதாபாத் நகர்களுக்கிடையே சபர் மதி நதிக் கரையில் சுமார் 886 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படவுள்ள இந்த 'கிப்ட் சிட்டி', லண்டன், சிங்கப்பூர், துபாய் மற்றும் ஹாங்காங் ஆகிய நகரங்களுக்கு இணையான அளவில் உருவாக்கப்பட உள்ளது .
மோடியின் இந்த மெகா சிட்டியை உருவாக்க ரூ.1,818 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், அதற்கான அடிப்படை வசதிகளுக்காக சிண்டிகேட் பேங்க், பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப்-சிந்துபேங்க் மற்றும் கார்ப் பொரேசன் பேங்க் ஆகிய 5 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ரூ.1,157 கோடி அளிக்கின்றன.
அனைத்து வசதிகளையும் கொண்ட மின்விநியோகம், ஒரு நீர்த் தேக்கம், ஆட்டோமேட்டி குப்பைசேகரிப்பு, குடி நீர் வடிகால் பராமரிப்பு, சுரங்க சாலைகள் உள்ளிட்டவை இந்த அடிப்படை வசதிகளில் அடங்கும்.
நரேந்திர மோடி அவர்களின் கனவு திட்டமான இந்த கிப்ட் சிட்டி 2007ம் ஆண்டு ஷாங் காய் பயணத்திற்கு பிறகு அறிவித்த ஒருதிட்டம் இது என்பது குறிப்பிடதக்கது.
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.