உங்களுடன் இணைந்துசெயல்பட விரும்புகிறேன். நம் நாடுகளுக்கு இடையே, நீண்டகாலமாக தீர்க்கப் படாமல் உள்ள பிரச்னைளுக்கு, சுமுக தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’ என்று , பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: உங்களுடனான சந்திப்பு, திருப்தி கரமாகவும், ஆக்கப் பூர்வமாகவும் இருந்தது. சந்திப்பின் போது, இருவரும் நடத்திய, ஆசியபிராந்திய நலன் குறித்த விவாதம், பயனுள்ள வகையில் இருந்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையே, நீண்டகாலமாக, குறிப்பிட்ட சில பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. இந்த பிரச்னைகளுக்கு, விரைவில் தீர்வுவரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எதிர் காலத்திலும், உங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன். என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.