திருவள்ளூர் மாவட்ட இந்துமுன்னணி தலைவர் சுரேஷ் குமார் படுகொலை செய்யப்பட்டதற்கு மத்திய இணையமைச்சரும், தமிழக பா.ஜ.க தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்து முன்னணி அமைப்பின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ் குமார், புதன் கிழமை (ஜூன் 18) சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்தச்செயல் மிகவும் கண்டனத்துக்குரியது.
அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையத்துக்கு அருகில் சுரேஷ் குமாரின் டெலிபோன் பூத்தில் இரவு 10.30 மணிக்கு இந்த படுகொலை நடந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.
சுரேஷ்குமார் இந்து முன்னணியில் பல ஆண்டுகள் சமூகப் பணி யாற்றியவர். மறந்தும் பிறருக்கு தீங்கு நினைக்காத தூய எண்ணம்கொண்டவர். அப்படிப்பட்டவர் கொல்லப்பட்டிருப்பது சமூக சிந்தனையாளர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும்.
தமிழகத்தில் இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்படுவது வாடிக்கையாக மாறி விட்டது. கடந்த ஆண்டில் பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்ட ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இதில் குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் சட்டரீதியான நடவடிக்கைகளை துரிப்படுத்தாத காரணத்தால் மீண்டும் இது போன்ற கொடூரச்சம்பவம் தொடர்ந்து வருகிறது.
தமிழக அரசு இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து கைதுசெய்து தண்டனை வழங்கவேண்டும். அப்போது தான் இது போன்ற கொலைகளை தடுக்கமுடியும்.
சுரேஷ் குமாரை கொன்ற கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்கவேண்டும்'' என கேட்டுக் கொண்டுள்ளார்.
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.