மும்பையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.
மும்பை துறைமுக பொறுப்பு கழகத்தின் 142 -வது ஆண்டு நிறுவன தினம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது.
நாட்டில் ரூ.75 ஆயிரம்கோடி மதிப்பிலான 265 சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்கள் கிடப்பில் கிடந்தன. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச் சூழல் துறை ரெயில்வே போன்ற அமைச்சகங்களிடம் இருந்து அனுமதிகிடைக்காத காரணங்களால் இந்த திட்டங்கள் கிடப்பில்போடப்பட்டு இருந்தன. இதில் ரூ.40 ஆயிரம் கோடி திட்டத்துக்கு சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. இந்த பணிகள் அடுத்த 2 ஆண்டுகளில் செய்து முடிக்கப்படும்.
கிடப்பில் இருக்கும் மீதமுள்ள ரூ.35 ஆயிரம் கோடிக்கான திட்டங்களுக்கு இன்னும் 8 முதல் 10 நாட்களில் அனுமதி வழங்கப்பட்டுவிடும்.
மும்பையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். மும்பையில் உலகதர கப்பல் முனையம், புதிய நீர்மார்க்க திட்டங்கள், 500 அறைகளை கொண்ட மிதக்கும் ஓட்டல், 3 முதல் 4 மிதக்கும் ரெஸ்டாரண்டுகள் போன்ற திட்டங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.
மும்பை துறைமுக பொறுப்புகழகத்துக்கு சொந்தமான ரூ.75 ஆயிரம்கோடி மதிப்புள்ள நிலத்தை தனியார் கட்டுமான அதிபர்களிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று தெரிவித்தார்.
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.