வெங்காயம் விலை உயர்வு மத்திய அரசு அதிருப்தி

 வெங்காயம் விலையில் மொத்தவிற்பனை விலைக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் பெரியஇடைவெளி இருப்பது குறித்து மாநில அரசுகள்மீது மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது .

பதுக்கலை கட்டுப்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழ்நாடு, குஜராத்தவிர இதில் வேறுமாநிலங்கள் தீவிரம்காட்டாதது குறித்து மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

குஜராத் மற்றும் தமிழகத்தில் மட்டும் சுமார் 35,000 அதிரடிசோதனை நடத்தப்பட்டது. ஜனவரி மாதம் முதல் பதுக்கலுக்கு காரணமான 6,223 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

டெல்லியில் வெங்காயம் விலை சில்லறை விற்பனைச்சந்தையில் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டு வருகிறது. ஆனால் மொத்தவிற்பனை விலையோ கிலோவுக்கு ரூ.18. இந்த இடைவெளி ஏன் என்று மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது குறித்து , மத்திய நுகர்வோர் விவகார அமைச்சக செயலாளர் கேசவ்தேசிராஜூ கூறியதாவது:-

வெங்காய விற்பனையில் மொத்தவிலைக்கும், சில்லறை விலைக்கும் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. அதேநேரம் வெங்காயத்தின் கையிருப்பும் அதிகளவில் இருக்கிறது. வினியோகமும் சீராக உள்ளது. அப்படி இருக்கும் போது ஏன் இந்த இடைவெளிவருகிறது என்பது தெரியவில்லை. இதைவைத்து பார்க்கும்போது, சில்லறையாக விற்பனை செய்வதில் தான் பிரச்சினை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

எனவே வெங்காயத்தின் சில்லறை விலையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்ளப்படும். வெங்காய பதுக்கலை தடுப்பதற்கு உதவியாக வெங்காய விற்பனையாளர்களது இருப்பை கட்டுப்படுத்துவற்கான அனுமதியை அளிக்கும்படி சத்தீஷ்கார், மேற்கு வங்காளம், டெல்லி ஆகிய மாநிலங்கள் மத்திய அரசை கேட்டுக்கொண்டு உள்ளன. விரைவில் இதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...