ஈராக்கில் இருந்து நர்சுகள் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு, நர்சு குடும்பத்தினர் நேரில்சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பாஜக. மாநில தலைவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவிலில் நேற்று சாமி தரிசனம்செய்தார்.
அப்போது அவருக்கு ஈராக்கில் தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்த நர்சு லெஷிமா ஜெரோஸ் மோனிஷாவின் தாயார் எட்விஜம்மாள், உறவினர்களான அமல்ராஜ், ஜனார்த்தனம், ரமேஷ்கில்லாரி ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பாரத பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் தீவிர முயற்சியால் தூத்துக்குடியை சேர்ந்த நர்சு மற்றும் கேரள மாநிலத்தவர்கள் ஈராக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் இன்று சொந்த ஊருக்கு வருவார்கள். அவர்களை கேரள மாநில பாஜக. தலைவர் முரளிதரன் வரவேற்கிறார் என்று தெரிவித்தார்.
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.