கங்கை நதியை சுத்தபடுத்தும் திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது “கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணி தொடர்பாக பாஜக தேசியகவுன்சில் குழு கூட்டத்தில் பேசினேன். அப்போது அந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தலைவர்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக தங்களது ஒருகையை மட்டும் உயர்த்தினர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ தனது 2 கைகளையும் எனக்கு ஆதரவாக உயர்த்தினார். இதிலிருந்து அவர், கங்கைநதி மீது எவ்வளவு ஈடுபாடு கொண்டுள்ளார் என்பதை புரிந்துகொண்டேன்.
கங்கோத்ரி முதல் கங்காசாகர் வரை தடையின்றி கங்கை நதி தொடர்ந்துபாய்வதை மத்திய அரசு உறுதிசெய்யும். கங்கை நதியை சுத்தப்படுத்துவது குறித்து பல்வேறு தரப்பினரிடம் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் அது தொடர்பான திட்டம் அறிவிக்கப்படும். அந்த திட்டத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு தரும் ‘ என்றார்.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.