மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார்

 2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை துவங்கியது. செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்தார்.

அதன் பிறகு புதன்கிழமை பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். இந்நிலையில் அருண் ஜேட்லி 2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இன்று தாக்கல் செய்யப்பட்டது நாட்டின் 84வது பட்ஜெட் ஆகும். இது பிரதமர் நரேந்திர மோடி அரசின் முதல் பட்ஜெட் ஆகும்.

மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

13.09 PM: பட்ஜெட் உரையை அருண் ஜேட்லி நிறைவு செய்தார்.

13.06 PM: பயோ – மெடிக்கல் கழிவு அகற்றும் பணிக்கு சேவை வரியில் விலக்கு.

13.05 PM: தொலைக்காட்சி, ஆன்லைன் விளம்பரங்களுக்கு சேவை வரி விதிப்பு. அச்சு விளம்பரங்களுக்கு சேவை வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது.

13.00 PM: புகையிலை பொருட்களுக்கான உற்பத்தி வரி 22% அதிகரிக்கப்படுகிறது.

12.59 PM: கல்வி வரியில் மாற்றமில்லை. வருமான வரியில் கல்விக்கான வரி 3% ஆகவே நீடிக்கும் என அறிவிப்பு.

12.58 PM: நாடு முழுவதும் புதிதாக 60 வருமான வரிச் சேவை மையங்கள் அமைக்கப்படும்.

12.55 PM: நேரடி வரி, மறைமுக வரி வசூல் இலக்கு இடைக்கால பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டதே பின்பற்றப்படும்.

12.50 PM: ரூ. 25 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு 15% வரிச்சலுகை வழங்கப்படும்.

12.47 PM: வரிவிதிப்பின் மூலம் ரூ.9.77 லட்சம் கோடி வருவாய் ஈட்டலாம் என அரசு எதிர்பார்க்கப்படுகிறது.

12.46 PM: 80(சி) பிரிவின் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

12.45 PM: வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு.

12.44 PM: சேமிப்புக்கான வரி விலக்கு வரம்பு ரூ.1 லட்சமாக உயர்வு.

12.43 PM: தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

12.42 PM: வருவாய் பற்றாக்குறை ஜி.டி.பி.யில் 2.1% ஆக இருக்கும்.

12.40 PM: வடகிழக்கு மாநிலங்களுக்காக பிரத்யேகமாக ‘அருண் பிரபா’ என்ற 24 மணி நேர தொலைக்காட்சி அலைவரிசை துவங்கப்படும்.

12.38 PM: வடகிழக்கு மாநிலங்களில் ரயில் சேவையை மேம்படுத்த ரூ.1000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது.

12.35 PM: இமாலய மலை தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள உத்தராகண்டில் தேசிய அகாடமி நிறுவப்படும்.

12.30 PM: இடம்பெயர்ந்த காஷ்மீரிக்கள் மறுவாழ்விற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

12.26 PM: கங்கை நதியை சுத்தப்படுத்த வெளிநாடு வாழ் இந்தியர் நிதி திட்டம்.

12.25 PM: கங்கை நதியை தூய்மைப்படுத்தி, மேம்படுத்த ரூ.2037 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமாமி கங்கா (“Namami Ganga”) என இத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

12.25 PM: வரவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

12.24 PM: மணிப்பூரில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் நிறுவப்படும். தேசிய விளைடாட்டு அகாடமி அமைக்கப்படும்.

12.23 PM: தற்போது நாடு முழுவதும் 15,000 கிமீ தூரத்திற்கு எரிவாயு குழாய்கள் இருக்கின்றன. பொதுத்துறை – தனியார் துறை பங்களிப்பில் இது இருமடங்காக அதிகரிக்கப்படும்.

12.07 PM: காஞ்சிபுரம், மதுரா உள்ளிட்ட இடங்களில் தேசிய பாரம்பரிய சின்னங்களை பராமரிக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு.

12.20 PM: 6 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.

12.19 PM: தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.

12.18 PM: ரூ.100 கோடி செலவில் போர் நினைவிடம் கட்டப்படும்.

12.17 PM: மூத்த குடிமக்களுக்கான பென்சன் திட்டம் மறு சீரமைக்கப்படும்.

12.16 PM: கிராமப்புற சாலை மேம்பாட்டுக்கு ரூ.14,389 கோடி பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும்.

12.15 PM: புதிய மருத்துவக் கல்லூரிகள் இந்த நிதியாண்டில் அமைக்கப்படும்.

12.12 PM: தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் ரூ.500 கோடி செலவில் சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படும்

12.12 PM: இயற்கை விவசாயத்தை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.

12.11 PM: புதிய யூரியா கொள்கை கொண்டு வரப்படும்

12.10 PM: விவசாயிகளுக்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். விவசாய கடன்களை சரியாக திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 3% ஊக்கத் தொகை வழங்கப்படும்.

12.09 PM: நடப்பு நிதியாண்டில் விவசாய கடனாக ரூ.8 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

12.08 PM: வேளாண் துறையில், 4% வளர்ச்சியை எட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

12.05 PM: படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தப்படும். ஏற்கெனவே புதிதாக அமைக்கப்பட்ட 6 எய்மஸ் மருத்துவமனைகளும் செயல்படத் துவங்கியுள்ளன. மேலும் 4 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்படும்.

12.02 PM: சமுதாய வானொலி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

12.01 PM: 2019-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.

12.00 PM: கிராமப்புற வீட்டு வசதிக்கு ரூ.8000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கிராமப்புற குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

11.56 AM: விவசாயத்தில் புதிய யுக்திகளை அறிமுகப்படுத்த அசாம், ஜார்கண்ட் மாநிலங்களில் சிறப்பு மையம் அமைக்கப்படும்.

11.55 AM: நிலமில்லாத 5 லட்சம் விவசாயிகளுக்கு ‘நபார்ட்’ வங்கி மூலம் நிதியுதவி வழங்க பரிந்துரை.

11.54 AM: காக்கிநாடா துறைமுகத்தில், வன்பொருள் ஏற்றுமதிகளை கையாளும் மையம் உருவாக்கப்படும்.

11.54 AM: ரூ.100 கோடி செலவில் மதரஸாக்கள் நவீனப்படுத்தப்படும்.

11.54 AM: கிராமங்களில் மின்சார வசதியை மேம்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

11.54 AM: கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த, நவீனமயமாக்கப்பட்ட 15 மாதிரி கிராம சுகாதார மையங்கள் நிறுவப்படும்.

11.52 AM: விவசாய சேமிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 5000 கோடி ஒதுக்கீடு.

11.50 AM: தெலுங்கானாவில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும். ஆந்திரம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வேளாண் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.

11.48 PM: பஞ்சாப், இமாச்சல பிரதேசம், பிஹார், ஒடிசா, ராஜஸ்தானில் ஐ.ஐ.எம்.கள் அமைக்கப்படும்.

11.47 AM: ரூ.500 கோடி செலவில் மேலும் 5 ஐ.ஐ.டி.க்களும், 5 ஐ.ஐ.எம்.களும் நிறுவப்படும். ஜம்மு, சத்தீஸ்கர், ஆந்திரம், கேரளா, கோவா ஆகிய மாநிலங்களில் ஐ.ஐ.டி.,கள் அமைக்கப்படும்.

11.46 AM: பெருநகரங்களில் பெண்கள் பாதுகாக்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

11.45 AM: பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளுக்கு தீர்வு காண டெல்லியில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்படும்.

11.41 AM: ஆண் – பெண் பாலின பாகுபாடை தவிர்க்க பள்ளிகளில் இது தொடர்பான விழிப்புணர்வு கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.

11.40 AM: பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ திட்டம் (Beti Bachao, Beti Padhao yojana) ரூ.100 கோடி செலவில் அமலுக்கு வருகிறது.

11.39 AM: பிரெயில் எழுத்துக்களுடன் கூடிய ரூபாய் நோட்டுகள் அமலுக்கு வரும், இதற்காக 15 பிரெயில் அச்சகங்கள் அமைக்கப்படும்.

11.38 AM: வரிச் சட்டங்களில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள தொழில்துறையுடன் ஆலோசிக்க சிறப்பு குழு அமைக்கப்படும்.

11.37 AM: பாதுகாப்புத்துறை, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதமாக அதிகரிக்கப்படும்.

11.35 AM: அந்நிய நேரடி முதலீடு மூலம் கூடுதல் நிதி ஆதாரம் திரட்ட குறிப்பிட்ட சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும்.

11.33 AM: அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் வளர்ச்சியில் நம்பிக்கை கொள்ள வேண்டும். முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறு நிலையான வரி விதிப்பு முறையை கொண்டு வரப்படும்.

11.30 AM: தாழ்த்தப்பட்ட மக்கள் வளர்ச்சிக்காக ரூ.50,548 கோடி ஒதுக்கப்படுகிறது.

11.29 AM: ரூ.200 கோடி செலவில் குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை நிறுவப்படும்.

11.27 AM: சுகாதார மேம்பாட்டிற்கு ‘பாரத் ஸ்வச் யோஜனா’ செயல்படுத்தப்படும்.

11.25 AM: நீர்பாசனத்தை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கப்படும். இதற்காக ‘பிரதான் மந்திரி கிருஷி சிச்சாயின் யோஜனா’ செயல்படுத்தப்படும்.

11.22 AM: 9 நகரங்களில் இ- விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

11.20 AM: கிசான் விகாஸ் பத்திர திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

11.19 AM: வீடுகளுக்கு 24 மணி நேரம் மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

11.18 AM: 100 நவீன நகரங்களை உருவாக்க ரூ.7060 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

11.17 AM: வங்கிகளுக்கு கூடுதல் சுயாட்சி அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்படும்.

11.15 AM: உற்பத்தித் துறையிலும், கட்டுமானத் துறையிலும் வளர்ச்சியை துரிதப்படுத்துவது அவசியம்.

11.13 AM: வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

11.12 AM: அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7% முதல் 8% வரை அதிகரிப்பதே இலக்கு.

11.11 AM: வரி விவகாரங்களை கையாள உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

11.11 AM: மானியங்கள், எரிபொருள் பொருளாதார கொள்கைகள், உரங்களுக்கான மானியம் மறு சீரமைக்கப்படும்.

11.10 AM: பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும். நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.1% என்ற சவாலான இலக்கை எட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

11.10 AM: கவர்ச்சித் திட்டங்கள், அநாவசிய செலவினங்களை அரசு தவிர்க்க வேண்டும். அரசு செலவினங்களை நிர்வகிக்க தனியாக ஒரு ஆணையம் அமைக்கப்படும்.

11.09 AM: இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த மிக முக்கியமான, துணிச்சலான முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

11.08 AM: இராக் உள்நாட்டு சர்ச்சையும், பருவமழை எதிர்பார்த்த அளவைவிட குறைவாக பெய்துள்ளதும் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

11.08 AM: கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி 5%-க்கும் குறைவாக இருந்தது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி உள்ளது.

11.05 AM: மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்பதை மத்திய அரசு உணர்ந்து இருக்கிறது.

11.04 AM: வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வை இனியும் அரசு பொறுத்துக் கொள்ளாது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...