தேசிய அளவில் புதிய சுகாதாரக்கொள்கை விரைவில் வெளியிடப்படும்

 தேசிய அளவில் புதிய சுகாதாரக்கொள்கை விரைவில் வெளியிடப்படும், அனைவருக்கும் சுகாதாரம் என்பதை ஒருசமுதாய இயக்கமாக செயல்படுத்தும் வகையில் தற்போதைய தேசியசுகாதார திட்டம் மறு பரிசீலனை செய்யப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

இருநாள் பயணமாக ஒடிஸா வந்த அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

தேசிய அளவில் விரிவான புதியசுகாதாரக் கொள்கையை வரையறை செய்ய மத்திய அரசு விரும்புகிறது. நவீன உலகில் மருத்துவ நலச்சிகிச்சை தொடர்பாக பல்வேறு சவால்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்தசவால்களை சமாளிக்க நமக்குத்தேவை விரிவான சுகாதாரக் கொள்கை.

மருத்துவச் சிகிச்சை துறையில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி, மாற்றங்களை கருத்தில் கொண்டு உள்நாட்டு, வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தியபிறகு, இந்த புதியசுகாதாரக் கொள்கைக்கு இறுதிவடிவம் தரப்படும். தேசியசுகாதார இயக்கம் வரும் 2015 ஏப்ரல் மாதம் நிறைவுபெறுகிறது. இந்த இயக்கத்துக்கு இன்னும் வலுவூட்டும் விதமாக இதை மறு பரிசீலனை செய்யும்பணியில் இருக்கிறோம்.

டாக்டர்கள் வெளிநாடுசெல்வது வேதனை: பயிற்சிபெற்ற டாக்டர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகவருமானம் தரும் வேலைகளை தேடி வெளிநாடுகளுக்கு செல்வது மிகவும் வேதனைதருகிறது. எனினும் இதுபோல ஒட்டுமொத்தமாக அவர்கள் பிறநாடுகளுக்குச் செல்வதை தடுக்கும் நோக்கமோ அல்லது திட்டமோ எதுவும் மத்திய அரசுக்குஇல்லை.

எனினும் ஒருடாக்டரை உருவாக்க மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவழிக்கப்படுகிறது என்பதை அவர்கள் உணரவேண்டும்.

ஒடிஸாவில் தாய், சேய் இறப்புவிகிதம் அதிகம்: ஒடிஸா மாநிலத்தில் மகப்பேறு கால தாய், சேய் இறப்புவிகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கிறது. அதோடு ஆரம்பசுகாதார நிலையங்களின் எண்ணிக்கையும் இலக்கை காட்டிலும் குறைவாக உள்ளது

ஒடிஸாவில் போதியளவுக்கு மருத்துவ, சுகாதாரச்சேவைகள் இல்லை. கிழக்கு இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பில் ஒடிஸாவை மிகச்சிறந்த மாதிரி மாநிலமாக மாற்றுவதற்கு போதிய நிதிவசதியை மத்திய அரசு அளிக்கும்.

தாய், சேய் இறப்புவிகிதம் ஒடிஸாவில் அதிகமாக இருப்பதற்கு மகப்பேறு மற்றும் குழந்தை நலமருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், ஆய்வுக் கூட தொழில்நுட்ப ஊழியர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாததே காரணம் என்றார் ஹர்ஷவர்தன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...