தாமதம் பொருளாதாரத்தை சீரழித்துவிடும்

 முந்தைய அரசில் பின்பற்றப்பட்ட திட்டம்போல் இல்லாமல், 80 சதவீத நிலம் கையகப்படுத்திய பிறகே, புதிய சாலைத் திட்டத்திற்கான, ‘டெண்டர்’ வெளியிடப்படும்.என, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர், நிதின்கட்காரி கூறினார்.

இதன் மூலம் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில், மத்தியில் ஆளும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு புதுமையைப் புகுத்தியுள்ளது ..டில்லியில் நேற்று, ‘பிக்கி’ எனப்படும், இந்தியதொழில் வர்த்தக கூட்டமைப்பு மாநாட்டில், சாலைப் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மத்திய அரசு என்னென்ன திட்டங்களை, எப்படி செயல்படுத்த போகிறது என, கட்காரி பட்டியலிட்டார்.

அவர் பேசியதாவது:முந்தைய அரசு, 10 சதவீத இடங்களைக் கூட கையகப்படுத்தாமல், ஏராளமான சாலைத் திட்டங்களை அறிவித்தன. இதனால், அந்ததிட்டங்கள் அறிவிக்கப்பட்ட கையோடு முடங்கிவிட்டன; ஏராளமான நிதியும் முடங்கிவிட்டது; இதனால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது.*பிரதமர் உத்தரவின் படி, புதுமையான திட்டத்தை பின்பற்றுகிறோம். புதிய சாலைத் திட்டங்களுக்கான, 80 சதவீத நிலங்களை கையகப்படுத்திய பிறகே, அவற்றிற்கான டெண்டர்களை வெளியிடுகிறோம்.

*தாமதம் தான் பொருளாதார சிரமங்களுக்கு காரணம் என்பதை அறிந்த நாங்கள், அனுமதிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செய்து முடிக்க, ‘விரைவாக முடிவெடுங்கள்’ என, துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளோம். *முந்தைய அரசில், மூன்று மாதங்கள் முதல், ஒன்றரை ஆண்டுகள் வரை, திட்டங்கள் முடங்கிக் கிடந்தன. அந்நிலை தொடரக்கூடாது என்பதில், நாங்கள் உறுதியாக உள்ளோம

தாமதம் பொருளாதாரத்தை சீரழித்துவிடும். உள்கட்டமைப்பு திட்டங்களில், ஒரு நாள் தாமதம், 15 கோடி ரூபாயை தின்றுவிடும். எனவே, தாமதத்திற்கு இடமின்றி, உடனுக்குடன் முடிவெடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்திஉள்ளேன

நிலம் கையகப்படுத்துவது, ராணுவ நிலம் உரிமை மாற்றம், ரயில்வே ஒப்புதல் போன்றவை சரிவர கிடைக்காததால், திட்டங்கள், மூன்றாண்டுகள் வரை தாமதமாகியுள்ளன; அது, இனிமேல் ஆகாது.என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...