பிரதமர் நரேந்திரமோடியை அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் சக் ஹேகல் சந்தித்து பேசினார். அவரிடம் இராக்கின் பாதுகாப்பு நிலை சீர்குலைந்து வருவது குறித்து மோடி கவலைதெரிவித்தார்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் சக் ஹேகல் தற்போது இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, இராக்நிலைமையை சமாளிக்க அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து பிரதமரிடம் சக்ஹேகல் எடுத்துக் கூறினார்.
இராக்கின் பாதுகாப்பு நிலை சீர்குலைந்து வருவதுகுறித்தும், அந்த பிராந்தியத்தில் அதன் விளைவுகள் குறித்தும் நரேந்திரமோடி கவலை தெரிவித்தார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராக்கில் உள்ள தனது நாட்டு ராணுவ வீரர்களை பாதுகாக்கும் நோக்கில், தீவிரவாதிகள் மீது விமானம்மூலம் தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
மேலும், இராக்கின் வட மேற்குப் பகுதியில் உள்ள மலை உச்சியில்சிக்கியுள்ள சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு உணவு பொட்டலங்களை விமானம்மூலம் வீசவும் திட்டமிட்டுள்ளது.
இதற்கான அனுமதியை தனது ராணுவத்துக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. இது குறித்தும் மோடியிடம் சக்ஹேகல் எடுத்துக் கூறியதாகத் தெரிகிறது.
இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகளைப் பொருத்தவரை, இந்தியாவில் அமைந்துள்ள புதிய அரசுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் உயர்நிலை அளவிலான பேச்சுவார்த்தையை வரவேற்பதாக பிரதமர் கூறியுள்ளார்.
மேலும், தனது அமெரிக்க பயணத்தை எதிர் நோக்கிக் காத்திருப்பதாக ஹேகலிடம் மோடி கூறினார். நாம் ஒருவருக்கொருவர் என்ன செய்துகொள்ள முடியும் என்று மட்டுமே இந்தப்பயணத்தை பார்க்காமல், உலகின் தொன்மையான ஜனநாயகமும் (அமெரிக்கா), மிகப் பெரிய ஜனநாயகமும் (இந்தியா) அமைதி, நிலைத்தன்மை, செழுமை ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக எவ்வாறு தோழமையைக் கட்டமைக்க முடியும் என்று பரிசீலிக்க ஒரு சந்தர்ப்பமாகவும் பார்ப்பதாக மோடி தெரிவித்ததாக பிரதமர் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறத மேலும், இரு நாடுகள் இடையிலான பாதுகாப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை மோடி வலியுறுத்தினார்.
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.