ராமர் பாலத்தை உடைக்கும்பேச்சுக்கே இடமில்லை

 ராமர் பாலத்தை உடைக்கும்பேச்சுக்கே இடமில்லை , அதேநேரம் சேது சமுத்திர திட்டத்தை நிபுணர்குழு பரிந்துரைத்துள்ள நான்கு வழிகளில் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை செயல்படுத்தும் திட்டம் தான் சேது சமுத்திர திட்டம். இந்ததிட்டம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது ராமர் பாலத்தை எக்காரணம் கொண்டும் உடைக்ககூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் கேள்விநேரத்தின் போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி கூறுகையில்,

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தும் போது ராமர்பாலத்தை உடைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதேநேரம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிபுணர் குழு நான்கு வழிகளை பரிந்துரைத்திருப்பதாகவும் அவற்றில் ஒருவழியில் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் நிதின் கட்காரி தெரிவித்தார்.

இதனிடையே நீதிபதிகள் நியமனமசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. நேற்று முன்தினம் இந்தமசோதா மக்களவையில் நிறைவேறியது. இதனிடையே நேற்று பாராளுமன்ற கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...