நீங்கள் அன்னியநேரடி முதலீட்டை எதிர்க்கிறீர்கள் என்றால் அன்னிய முதலீட்டை ஈர்க்க ஏன் சிங்கப்பூருக்கு செல்கிறீர்கள்? என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் சிங்கப்பூர் பயணம் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பியுள்ளார்
திரிணாமுல் காங்கிரஸ் அன்னிய நேரடி முதலீடுகுறித்து ஒருதெளிவான முடிவுக்கு வரவேணடும். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீடை அனுமதித்தது. இந்த முடிவுக்கு இரண்டுகட்சிகளை தவிர மற்ற அனைத்தும் ஆதரவு அளித்தன.
இடதுசாரிகளும், திரிணாமுல் காங்கிரசும்தான் அந்த கட்சிகள். நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு புறம் பாகிஸ்தானும், மறுபுறம் சீனாவும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஏற்படுத்திவருகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களை எதிர்த்து நாம் சண்டையிட வேண்டியுள்ளது. எனவே தான் நாங்கள் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை பாதுகாப்புதுறையில் அனுமதித்தோம்.
நேரடியாகவும், மறை முகமாகவும் 72 சதவீத ராணுவ தளவாடங்களை நாம் வெளிநாடுகளில் இருந்தே வாங்கியுள்ளோம். ஆகவே,அன்னிய நேரடி முதலீடு நாம் ராணுவத்தில் தன்னிறைவு பெற்று வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவிசெய்யும் என்பதால் பெரும்பாலான கட்சிகள் எங்களை ஆதரித்தன. ஆனால், இடதுசாரிகளும், திரிணாமுல் காங்கிரசும்தான் எதிர்த்தன.
நான் தனிப்பட்ட முறையிலேயே திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலரைகேட்கிறேன். நீங்கள் ஏன் பாதுகாப்புதுறையில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்தீர்கள்? இந்த கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் என்ன தெரியுமா? அவர்கள் அன்னிய முதலீட்டை முற்றிலும் எதிர்க் கிறார்களாம்.
இப்போது நான் கேட்கிறேன். நீங்கள் அன்னியநேரடி முதலீட்டை எதிர்க்கிறீர்கள் என்றால் அன்னிய முதலீட்டை ஈர்க்க ஏன் சிங்கப்பூருக்கு செல்கிறீர்கள்? எல்லாம் காரணமா கத் தான். தேர்தலில் ஜெயிக்க வெளிநாட்டு ஓட்டுக்கள் (வங்காளதேச ஊடுருவல் காரர்கள்) தேவை. அவர்களுக்கு அந்த வாக்குகள் இல்லையென்றால் தொகுதிகள் குறைந்துவிடும் அல்லவா. அதற்குத்தான் இவ்வாறு அருண்ஜெட்லி பேசினார்
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.