போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ நிலைகள்மீது பாகிஸ்தான் ராணுவம் கடந்த சிலநாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இந்த தாக்குதலில் எல்லையோர கிராமங்களில் உள்ள சிலவீடுகள் சேதம் அடைந்துள்ளன. கால்நடைகளும் உயிரிழந்து இருக்கின்றன.
இதைத்தொடர்ந்து இந்திய எல்லை பாதுகாப்புபடை வீரர்களும் பதிலடி கொடுக்கும் விதமாக தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பொதுச் செயலாளர் ராம் மாதவ் ஆகியோர் இன்று காலை எல்லைப்புற பகுதிகளில் அமைந்துள்ள முகாம்களுக்கு சென்றுள்ளனர்.
ஜம்முவின் ஆர்எஸ்.புரா பகுதிக்கு சென்று பார்வையிட்ட அமித்ஷா, அங்குள்ள கிராமத்தினர் மற்றும் அப்பகுதியின் எல்லை கட்டுப்பாட்டுகோடு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினர் ஆகியோரை சந்தித்தார். அதன் பின் பேசிய அவர், எல்லை பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவருவது குறித்து பாரதீய ஜனதா கட்சி கருத்தில் கொண்டுள்ளது , இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.