'பிரதான் மந்திரி ஜன் தன் யோஜ்னா' என்ற பெயரில், வீட்டுக்கு ஒரு வங்கிக்கணக்கு வைத்திருக்க வகை செய்யும் புதியதிட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, வறுமையை ஒழிக்க நிதி தீண்டாமை முதலில் அகற்றப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
ஏழை மற்றும் பின் தங்கியமக்கள், அரசு நலத்திட்டங்கள் மூலம் பயன் பெறும் வகையில், 7.5 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்க திட்டமிடப்படும் என பிரதமர் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார்.
அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டத்துடன், அந்தகணக்கின் சேவைகளை பெறுவதற்கான செல்ஃபோன் வங்கி சேவையையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
அதன்படி, ஜன் தன் திட்டத்தில் தொடங்கப்படும் வங்கி கணக்குகளின் வாடிக்கையாளர்கள் *99# என்ற எண்ணில் கணக்கு விவரங்களை அறிய வசதி செய்யப் பட்டிருக்கிறது.
ஜன் தன் யோஜனா திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறியதாவது:
ஜன் தன் திட்டம் மூலம் அடுத்த ஆண்டு (2015) ஜனவரி 26ம் தேதிக்குள் 7.5 கோடி பேருக்கு வங்கி கணக்குகள் தொடங்கப்படும்.
அவர்கள் அத்தனை பேருக்கும் வங்கிக்கணக்கு தொடங்கித் தரப்படுவதோடு "ரூபே' என்ற வங்கிப்பண அட்டை (டெபிட்கார்டு) வழங்கப்படுவதுடன், ரூ.30 ஆயிரத்துக்கான காப்பீட்டுவசதியும், ரூ.1 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு வசதியும் அளிக்கப்படும். மேலும், வங்கிக் கணக்கு தாரர்களுக்கு ரூ.5 ஆயிரத்துக்கான கடனுதவியும் வழங்கப்படும்.
இத்திட்டப் பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளில் அரசின்மானிய உதவித்தொகைகள் நேரடியாகச் செலுத்தப்படும். இது ஊழலை தடுப்பதற்கான முக்கிய கருவியாகும்.
சமூகத் தீண்டாமையை அகற்ற மகாத்மாகாந்தி பாடுபட்டார் என்றால், ஏழ்மையை ஒழிக்கவேண்டும் என்று நாம் விரும்பினால், நாம் முதலில் நிதித் தீண்டாமையை அகற்றவேண்டும்.
ஒவ்வொரு நபரையும் நிதி அமைப்புடன் நாம் இணைக்க வேண்டியுள்ளது. அதற்காகவே, இத்திட்டத்துக்கு ஊக்கம் அளிக்கப் பட்டுள்ளது.
ஒரு வங்கிக்கணக்கு தொடங்கப்படும்போது, பொருளாதார நீரோட்டத்தில் இணைவதை நோக்கிய நடவடிக்கையாக அது அமையும்.
கடந்த 1969-ல் வங்கிகள் தேசியமய மாக்கப்பட்டன. ஏழைமக்களின் வாயிற்படிக்கே நிதி அமைப்பைக் கொண்டு செல்லும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், நாடுசுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளான பிறகும், 68 சதவீத மக்கள் கூட வங்கி அமைப்பில் இணையவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
பணக்காரர்கள் குறைந்த வட்டியில் வங்கிகளில் கடன்பெறுவது சுலபமானது. ஆனால், பணக்காரர்கள் செலுத்தும் வட்டியைவிட 5 மடங்கு அதிகமான வட்டியை ஏழைகள் வட்டிக்காரர்களிடம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வங்கிவசதியை ஏழைகளுக்கு ஏற்படுத்தி தர வேண்டியது வங்கித்துறையின் பொறுப்பாகும் .
ஒரே நாளில், 1.5 கோடி புதிய வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளன. அது போல், 1.5 கோடி பேருக்கு, 1 லட்சம் ரூபாய்க்கு விபத்து காப்பீடு கிடைத்துள்ளது.இந்த நாளை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். விஷ சக்கரத்தில் சிக்கியிருந்த ஏழைகளுக்கு விடுதலை கிடைத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்டுள்ள, 7.5 கோடி பேருக்கு, அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் வங்கிக் கணக்கு துவக்கும் திட்டத்தை செய்து முடிப்போம் என, வங்கிகள் எனக்கு உறுதியளித்துள்ளன.
ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ள திட்டம் இது. இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, குறைந்த அளவில் பென்ஷன் வழங்கவும் திட்டம் உள்ளது.இன்று, பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.நிறுவனங்கள் :இது வரை, ஒரே நாளில், 1.5 கோடி பாலிசிகளை எடுத்திருக்காது; அது இன்று நடந்துள்ளது. பொருளாதார வரலாற்றில், ஒரே நாளில், 1.5 கோடி வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டதில்லை; அது இன்று நடந்துள்ளது.இதற்காக, நாடு முழுவதும், 7 ஆயிரம் முகாம்கள் நடைபெற்று உள்ளன. அதில், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்று, இந்த சாதனையை படைத்துள்ளனர் என்றார்.
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.