மத்திய அரசு மூலமாக கிடைக்கும் திட்டங்கள் அனைத்தையும் தமிழகத்துக்கு கொண்டுவருவது என் கடமை

 மத்திய அரசு மூலமாக கிடைக்கும் திட்டங்கள் அனைத்தையும் தமிழகத்துக்கு கொண்டுவருவது என் கடமை என்று, மத்திய கனரக மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெருவித்துள்ளார்..

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க வெள்ளி விழாவை தொடர்ந்து சங்க அலுவலகத்துக்கு வந்த மத்திய கனரக மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது :

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தொழில் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், சங்கத்தின் அடுத்த 25 ஆண்டுகாலம் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்தும் செயல்வடிவம் தயார்செய்து வைத்துள்ளனர். கடந்த 6 மாதகாலத்தில், கடைசி 3 மாதங்கள் மட்டும் உலக நாடுகள் பாராட்டும் அளவுக்கு நாட்டின் வளர்ச்சி 2 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில், தமிழகம் முதல் நிலை வகிக்கவேண்டும் என்பது என் எண்ணம். 2020-ம் ஆண்டு திருப்பூர் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து செயல்வடிவம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதை நடை முறைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ராமநாதபுரம், ஓசூர் ஆகிய பகுதிகளிலும் திருப்பூரின் தொழில்துறையை விரிவுபடுத்தும் பணிகளை தொடங்கவேண்டும்.

மத்திய அரசு மூலமாக கிடைக்கும் திட்டங்கள் அனைத்தையும் தமிழகத்துக்கு கொண்டுவருவது என் கடமை. டெல்லி இல்லத்தில் அமைக்கப்படவுள்ள அலுவலகத்தை தமிழகம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் அணுகலாம். நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதை முழுமனதுடன் வரவேற்கிறேன் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...