இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகமாக கொண்டிருக்கும் நாம், உலகுக்கு நல்ல ஆசிரியர்களை அளிக்கவேண்டும். இந்தியாவின் எதிர் கால நம்பிக்கை தூண்களான மாணவர்களிடம் கலந்துரையாடுவதை நான்செய்த பாக்கியமாக கருதுகிறேன் என்று பள்ளி மாணவர்களிடம் பிரதமர் மோடி பேசினார் ..
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி வெள்ளிக்கிழமை நாடு முழுவதிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்காக தனது ஆசிரியர் தினவிழா சிறைப்புரையை வீடியோ காண்பெரன்சிங் மூலம் ஆற்றினார். இன்றைய நிகழ்ச்சியை சுமார் 2 கோடி மாணவர்கள் பார்த்து பயன் பெற்றனர். பிரதமர் மோடி மாணவ, மாணவிகளுடன் உரையாடுவது இது வே முதன்முறை ஆகும். மாலை 3 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி 4. 45 மணி வரை நடந்தது. மாணவ, மாணவிகள் கேட்கும் கேள்விக்கு பிரதமர் பதில் அளித்தார்.
இதற்கென மொத்தம் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வுசெய்யப்பட்டனர். டில்லி மானேக்சா ஆடிட்டோரியத்தில் நேரடியாக ஆயிரம் மாணவ, மாணவிகள் பிரதமருடன் பேசும் வாய்ப்பு கிட்டியது. இந்த நிகழ்ச்சி நாடுமுழுவதும் நேரடியாக லைவ் செய்யப்பட்டது. வீடியோ கான்பரன்ஸ்சுக்கு 600 க்கும் அதிகமான சென்டர்கள் உருவாக்கப்பட்டன.
நிகழ்ச்சி துவங்கியதும் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவின் எதிர் கால நம்பிக்கை தூண்களான மாணவர்களிடம் கலந்துரையாடுவதை நான்செய்த பாக்கியமாக கருதுகிறேன். ஆசிரியர்கள் தினம் நமது சிறப்பான பாரம்பரியம் ஆகும். எனது வாழ்க்கையில் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றினர். சிலரது வாழ்க்கையில் ஆசிரியர்களே மாற்றத்தை உருவாக்கியுள்ளனர் .
கல்வியில் ஏற்பட்டுள்ள நாம் இப்போது கடை பிடிக்கும் கொள்கைகள் குறித்து விவாதிக்க வேண்டிய காலத்தில் உள்ளோம். நீண்டகால கற்பித்தல் குறித்து யோசிக்கவேண்டும். ஏன் இவ்வாறு செயல்பாடு உள்ளது என்பதை அறியவேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களாக உருவாக தயங்குகின்றனர். ஆசிரியர்கள் பற்றறாக் குறை கவலை அளிக்கிறது. ஆசிரியர்கள் முக்கியத்துவம் குறித்து நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நல்ல ஆசிரியர்களுக்கு உலகம் முழுவதும் பற்றாக்குறை நிலவுகிறது. அவர்களை இந்தியாவில் உருவாக்க முடியாதா? வெளிநாடுகளில் பணியாற்ற இந்திய ஆசிரியர்களை நம்மால் அனுப்பி வைக்க இயலாதா? ஒவ்வொரு மாணவரின் உள்ளத்திலும் "நான் ஆசிரியராக உருவாகி, இந்தியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றுவேன்' என்ற உணர்வை நம்மால் ஏற்படுத்த முடியாதா?
நம் நாட்டில் உயர்ந்த நிலையில் உள்ள குடிமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் மருத்துவராகவோ, வழக்குரைஞராகவோ, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகவோ அல்லது வேறு உயர்ந்த நிலையிலோ இருக்கலாம்.
உங்கள் வீடு அருகே உள்ள பள்ளியில் ஒரு வகுப்பை நடத்த தன்னார்வத்துடன் நீங்கள் ஏன் முன்வரக் கூடாது? வாரத்தில் ஒரு நாளை, இந்த சேவைக்காக நீங்கள் ஏன் அர்ப்பணிக்க கூடாது? தேசத்தைக் கட்டமைக்க, கற்பித்தலை ஓர் இயக்கமாக மாற்றவேண்டும். வலுவான தேசத்தை உருவாக்க, கூட்டு முயற்சி இருந்தால் எதையும் நம்மால் சாதிக்க முடியும்.
நாட்டின் சுதந்திர தினத்தில் உரையாற்றிய போது, பல்வேறு பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததைச் சுட்டிக்காட்டி அவற்றைக் கட்டும் அவசியத்தை விளக்கினேன். அண்மையில் நான் ஜப்பான் சென்றபோது, அங்கு வசிக்கும் ஓர் இந்தியரின் ஜப்பானிய மனைவி என்னிடம் பேசியபோது "எங்கள் நாட்டு பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் கழிப்பறைகளைச் சுத்தம்செய்ய வேண்டும் என்று விதி உள்ளது. உங்கள் சுதந்திரதின பேச்சிலும் கழிப்பறையின் அவசியத்தையும் தூய்மையின் நோக்கத்தையும் உணர்த்திப் பேசினீர்கள்' என்று கூறினார்.
ஆனால், குஜராத்தில் ஒரு பள்ளியின் கழிப்பறைகளை மாணவர்கள் தூய்மைப்படுத்தும் காட்சியை ஒளிபரப்பிய ஒரு தொலைக்காட்சி, "மாணவர்களைப் பள்ளி நிர்வாகம் அசுத்தமான பணியில் ஈடுபடுத்துகிறது' என்று குறை கூறி செய்தியாக வெளியிட்டது. ஜப்பானியர்களிடம் உள்ள தூய்மை உணர்வு, ஏன் இந்தியாவில் இல்லாமல் போனது?
மாணவர்கள் டெக்னாலஜி துறையில் முன்னேற்றம் காணவேண்டும். பிறரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படித்து அறிய வேண்டும். மாணவர்கள், இளைஞர்கள் இந்நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லவேண்டும். தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நாம் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக நமது குழந்தைகளை உருவாக்கத் தவறினால், அது சமூககுற்றமாக கருதப்படும்
நீங்கள் அதிகம் வாசிக்க வேண்டும். குறிப்பாக சுயசரிதைகளை தொடர்ந்து படிக்க வேண்டும். அவை உங்களுக்கு ஊக்கம் அளிக்கக் கூடியதாக இருக்கும். சுயசரிதைகளை வாசிப்பது நமது வரலாறு குறித்த தெளிவினை ஏற்படுத்தும். உலக வரலாற்றையும் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். விளையாட்டு, திரைப்படங்கள், அறிவியல், வர்த்தகம் என பல்வேறு துறைகள் குறித்தும், அதில் சாதனை படைத்தவர்கள் குறித்தும் படிக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் மூழ்கி எல்லாவற்றுக்கும் "கூகுள் குரு' மூலம் விளக்கம்பெறும் நிலையே காணப்படுகிறது. இணையம் மூலம் உங்களுக்கு தகவல் கிடைக்கலாம்; ஆனால் ஞானம்வளராது.
உங்கள் ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு வளருங்கள். எங்களை போன்றவர்களின் வாழ்வில் ஆசிரியர்கள் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தனர். அவர்களுக்கு வணக்கம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்' என்றார் பிரதமர் மோடி.
பெண் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவதற்கு தான் முன்னுரிமை அளித்துள்ளேன் ஏனெனில்,பெண் குழந்தைகளுக்கு கற்பிப்பதன் மூலம், அவர்களது பிறந்தவீடு, அவர்கள் வளர்ந்து திருமணமாகி செல்லும் புகுந்தவீடு ஆகிய இரண்டு குடும்பங்களுக்குக் கல்வி கற்பிக்கிறோம். பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் சிறப்புற்று விளங்குவது மகிழ்ச்சி தருகிறது . ஆனால், பெண் குழந்தைகள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திக்கொள்ளும் விகிதம் அதிகமாக இருப்பது கவலை தருகிறது . இதனைத் தடுப்பதற்கு, பெண் குழந்தைகளுக்கென பள்ளிகளில் தனிக்கழிப்பறைகள் கட்டப்பட வேண்டியது அவசியம்
அதற்கு ஈடு செய்யும் விதமாக விளையாட வேண்டும். அதிகம் விளையாடி, நிறைய வியர்க்க வேண்டும். இளமை காலத்தில் இது முக்கியமான வேலை. எனவே, இதனைத் தொடர்ந்து செய்ய வேண்டும். தொடர்ந்து விளையாடினால், உடலில் நல்ல வளர்ச்சி இருக்கும்
முதல்வராகும் போதும், பிரதமராகும் போதும், எனது மன தளவில் மாற்றம் ஏற்படவில்லை. முதல்வராக இருக்கும்போது நடக்கும் சிறிய தவறுகளுக்கு நான்வருந்தியது இல்லை. ஆனால் பிரதமரான பின்னர் நான் மிக கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது. எனது பொறுப்பகள் மட்டுமே வளர்ந்துசென்று கொண்டிருக்கிறது. பிரதமராவேன் என நான் நினைத்துகூட பார்த்தது இல்லை. பள்ளியில் லீடராககூட இருந்தது கிடையாது. இவ்வாறு மோடி பேசினார்.
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.