மோடி மீண்டும் ஒருமுறை தனது தலைமை பண்பை நிருபித்துள்ளார்

 நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை தனது தலைமை பண்பை நிருபித்துள்ளார் . நூற்றண்டு வரலாறு காணாத ஜம்மு காஷ்மீர் வெள்ளத்திலிருந்து மக்களை மீட்பதர்க்கான நடவடிக்கைகளை மாநில அரசை முந்திக்கொண்டு எடுத்ததோடு மட்டும் அல்லாமல் , நிவாரண தொகையையும் உடனடியாக 2000 கோடியாக அறிவித்து தனது ஆழமான நிர்வாகத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 100 ஆண்டுகளில் கண்டிராத மாபெரும் வெள்ளத்தில் ஜம்மு காஷ்மீர் தத்தளிக்கிறது. பல ஊர்களில் வெள்ளம் கடல் போல ஓடுகிறது. 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் துப்பாக்கி குண்டுகளுக்கும், தீவிரவாதிகள் மற்றும் பிரிவினை வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கும் , அப்துல்லாக்களின் 60 பது வருட ஊழல் ஆட்சிகளுக்கும் பலிக்கிடாவாகி வறுமையின் எல்லையில் தத்தளித்து கொண்டிருக்கும் காஷ்மீரிகளை இன்று பெரும் வெள்ளமும் தத்தளிக்க வைத்துவிட்டது.

ஆனால் ஆள்வதோ மோடி அல்லவா. தன்னால் மக்களை வருமையில் இருந்து மட்டும் அல்ல இயற்க்கை பேரழிவில் இருந்தும் உடனடியாக மீட்க முடியும் என்பதை ஏற்கனவே குஜராத் பூகம்பத்திலும், உத்தரகாண்ட் பெரு வெள்ளத்திலும் நிருபித்து காட்டியவர் , இப்போது காஷ்மீர் பெரு வெள்ளத்திலும் மீண்டும் ஒரு முறை நிருபித்து காட்டிக் கொண்டிருக்கிறார்.

வெள்ளம் பெரும் பதிப்பை உருவாக்க போகிறது என்பதை அறிந்த உடனேயே முப்படையை சேர்ந்த இராணுவமும் , தேசிய பேரிடர் மீட்புக்குழுவும், துணை ராணுவப்படையினரும் மீட்பு பணியில் இறக்கப்பட்டனர். உடனடியாக நிலைமையை நேரில் ஆய்வு செய்து ரூ 1000 கோடியை நிவாரணமாக வழங்கி தேசிய பேரழிவாகவும் அறிவித்தார்.

30000 வீரர்களும் , 84 போக்குவரத்து விமானங்களும் , 284 மீட்ப்பு படகுகளும் மீட்ப்பு பணியில் ஈடுபட்டு 2 லட்சத்துக்கும் அதிக மானோரை மீட்டுள்ளனர் . இறுதி நபரை மீட்க்கும் வரை எங்கள் பணி ஓயாது. இது எங்கள் கடமையும் கூட என்ற இராணுவ தலைமை தளபதியின் சூளுரைக்கிணங்க மீட்பு பணியில் இராணுவம் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வருகிறது. இவர்களுடன் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவகர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

ஆனால் மக்களுக்கு சுதந்திரம் வாங்கி தருகிறோம், உங்களுக்கு சொர்கத்தை கட்டுகிறோம், நாங்கள்தான் உங்கள் பாதுகாவலன் என்று பொது மக்களை தூண்டிவிட்டு வயிர்வளர்த்து வந்த ஹூரியத் மாநாடு உள்ளிட்ட பிரிவினை வாதிகள் வெள்ளத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவே இராணுவத்தை நாடியதுதான் உண்மை.

இதில் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான யாசிந் மாலிக்கை மீட்டதே இராணுவம் தான். ஆனால் அவரோ ராணுவத்தினர் நடத்தி வந்த மீட்புப் பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும் மீட்புப் படகில் இராணுவம் சிகிச்சைக்காக ஏற்றியிருந்த உடல் நலம் குன்றிய பெண் நோயாளிகளை இறக்கிவிட்டுட்டு மீட்ப்பு படகை கடத்திச் சென்றுள்ளார்.

காஷ்மீர் முதல்வர் உமர் அப்த்துல்லாவுக்கோ நிலைமையை புரிந்து கொள்ளவே ஒரு வாரம் ஆகியுள்ளது. மாநில அமைச்சர்களில் 90 சதவித்தத்தினர் எங்கே இருகிறார்கள் என்பதை கண்டு பிடிப்பதற்கே சில நாட்கள் ஆகியுள்ளது. சேதம் அடைந்த முக்கிய பாலங்களை எல்லாம் இராணுவம் துரிதமாக சரி செய்துள்ள நிலையில் , முக்கிய சாலைகளில் உள்ள சிறு பள்ளங்களை சரி செய்ய கூட அரசு எந்திரத்தில் ஆள் இல்லை. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் மீது ஒரு சில பகுதிகளில் பிரிவினை வாதிகளின் தூண்டுதலின் பேரில் கல்லெறிந்த கலகக்காரர்களை கட்டுப்படுத்தக் கூட காவல் துறையில் ஆள் இல்லை. எங்கள் வீட்டிலும் மின்சாரம் இல்லை, தொலைபேசி வேலைசெய்யவே இல்லை 36 மணிநேரம் என்னிடம் அரசாங்கமே இல்லை என்று சாதாரண பிரஜையை போன்று பேசி தனது நிர்வாக திறமையின்மையை வெளிப்படுத்தியுள்ளார் உமர் அப்துல்லா.

ஆனால் மோடியோ மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதர்க்கான வாய்ப்பினை திருவிட்டார் என்றே கூறவேண்டும். அதை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திக் விஜய் சிங்கும் , குலாம் நபி ஆசாத்தும் உறுதி செய்துள்ளனர்

"பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நிவாரண பணிகளை, மத்திய அரசு திறம்பட செய்து வருகிறது ,. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளான முஷாராபாத் உள்ளிட்ட பகுதிகளில் வௌ்ள நிவாரண உதவி செய்ய மோடி தயாராக இருந்தது வரவேற்கத்தக்கது" திக் விஜய் சிங்.

"பிரதமரின் உடனடி நடவடிக்கை மகிழ்ச்சியை தருகிறது" குலாம் நபி ஆசாத்

"இந்த மாநில அரசுக்கு யாரும் வெள்ள நிவாரண பணிக்காக நன்கொடை வழங்கி விடாதீர்கள், அதை அவர்கள் விழுங்கி விடுவார்கள். மத்திய அரசுக்கு அதை கொடுங்கள். மத்திய அரசு மிக சிறப்பான பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக ராணுவ சகோதர்கள் ஆற்றியுள்ள பணி மகத்தானது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் காஷ்மீரிகள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்". ஆங்கில செய்தி சேனலுக்கு காஷ்மீரின் இஸ்லாமிய பெண் கொடுத்த பேட்டி.

ஆக மொத்தத்தில் தீவிர வாதிகளுக்கும் , பிரிவினை வாதிகளுக்கும் , ஆளும் அப்துல்லாக்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, அவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் ஜம்மு காஷ்மீரிகள் பகடைக் காயகத்தான் பயன்பட்டு வருகின்றனர்.

இந்திய ராணுவத்துக்கு இருக்கும் வெள்ளை உள்ளம் காஷ்மீரிகளை பாதுகாக்க பிறந்ததாக கூறிக் கொள்பவர்களிடம் இல்லவே இல்லை என்பதை அப்பட்டமாக உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது இந்த பெரும் வெள்ளம் என்பது மட்டும் நிதர்சனம்.

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...