இந்திய – சீன உறவை வலுப்படுத்தினால், புதியவரலாறு படைக்க முடியும், இந்தியாவும் சீனாவும் பயன்பெற்றால் உலகின் மொத்தமக்கள் தொகையில் 35 சதவீதம் மக்கள் பயன் பெறுகின்றனர் என பிரதமர் நம்பிக்கை .தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செவ்வாய்க் கிழமை சீன பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திரமோடி கூறும் போது, "வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்ட விஷயங்களில் இந்தியாவும் சீனாவும் இணைந்துள்ளன. இருநாடுகளும் இணைந்து மக்களுக்கு சிறந்த எதிர் காலத்தை உருவாக்க முடியும்.
இந்தியா – சீனாவுக்கு இடையேயான உறவு வெகுவாகவளர்ந்துள்ளது. இந்த உறவின் வளர்ச்சி மனித்தன்மையின் வரலாற்றை மாற்றி அமைக்கும். மேலும், இந்த கிரகத்தையே சிறப்பாக மாற்றி அமைக்கும்.
இந்தியாவும் சீனாவும் இணைந்து பலமைல்கல்களை ஒன்றாக கடக்கும் என்று நான் நம்புகிறேன். பலமைல்களை கடப்பதன் மூலம் இருநாடுகள் மட்டுமின்றி ஆசியாவும் மொத்த மக்களினமும் வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்திற்கான பாதையை நோக்கிமுன்னேறும்.
" இந்தியாவும் சீனாவும் பயன்பெற்றால் உலகின் மொத்தமக்கள் தொகையில் 35 சதவீதம் மக்கள் பயன் பெறுகின்றனர். அதேபோல இந்திய – சீனாவின் உறவு வலுப்பட்டால் உலகின் 35 சதவீத மக்கள் நெருக்கமாகிறார்கள். இந்திய – சீனாவின் பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்தால் உலகமக்கள் தொகையில் 35 சதவீத மக்கள்தொகையின் வாழ்வாதாரம் தரமான மாற்றத்தை அடையும்.
இருநாடுகளுக்கு இடையேயான உறவின் மூலம் புதியவரலாற்றை உருவாக்கி மனித குலத்திற்கு சிறந்த வருங்காலத்தையும் உருவாக்கமுடியும் என்று நான் நம்புகிறேன்" என்றார் மோடி.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
Leave a Reply
You must be logged in to post a comment.