சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட 9–ம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் நாடார்களை இழிவுப்படுத்தும் விதத்தில் கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன.
இப்பாடப் புத்தகத்தின் 168–ம் பக்கத்தில் காலணி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட சாதி கொடுமைகளும், மோதல்கள் மற்றும் பெண்களின் உடைகள் என்ற தலைப்பிலான பாடம் நாடார்சமுதாய பெண்களை மிக இழிவாகவும், கொச்சைப் படுத்தும் விதமாக வந்த பகுதியினை நீக்குவது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கடந்தமாதம் 13–ந் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இராணி இம்மாதம் 12–ந்தேதி மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள நாடார் இனமக்களின் ஆடைகள் பற்றி எழுதப்பட்டது முழுமையாக நீக்கப்பட்டது.
சமூக மாற்றத்திற்கு போராடியவர்கள் அந்தகாலத்தில் மேற்கொண்ட தோள்சீலை போராட்டம் குறித்து சேர்க்கப்படுகிறது.
அய்யா வைகுண்டசாமி குறித்து மாணவர்கள் மேலும் தகவல்களை அறிந்துகொள்ளும்படி பயிற்சிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
நாடார் இன மக்கள் வேறு பலதொழில்களில் ஈடுபட்டிருப்பதை குறித்தும் தகவல்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இது தவிர 1921–ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின் படி நாடார் என்ற சொல் இந்த சமூகத்தைச் சார்ந்த எல்லோரையும் குறிக்கும்படி ஒரு தனிகுறிப்பும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் இந்த பாடப்புத்தகத்தின் என்.சி.இ.ஆர்.டி. முழு ஒப்புதலுடன் சேர்க்கப்பட்டிருக்கிறது. மேலும் இதேமாற்றங்கள் என்.சி.இ.ஆர்.டி. வலைதளத்தில் உள்ள பாடபுத்தகத்திலும் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கிறது என்பதை மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி, எழுத்து மூலமாக தெரிவித்துள்ளார்.
நாடார் இனமக்களின் உணர்வுகளுக்கு பங்கம் ஏற்படாவண்ணம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என்பதையும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனின் அலுவலக செய்திக்குறிப்பில் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.