மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் சாலை சீரமைப்பு மற்றும் குடி நீர் வசதிகளை செய்துகொடுக்க ரூ. 200 கோடி அம்மாநிலத்திற்கு நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டித்தீர்த்ததால் அங்குள்ள அனைத்து நதிகளிலும், ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்திற்கு 270க்கும் அதிகமானோர் பலியானார்கள். மாநிலத்தில் 2,000–க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம்புகுந்தது. இதனால் காஷ்மீர் பலத்தசேதம் அடைந்தது. ராணுவ வீரர்கள் தவிர மற்றயாரும் மீட்பு பணியில் ஈடுபடாத நிலைமை ஏற்பட்டது. வெள்ளத்தினால் கடுமையான பாதிப்பை சந்தித்த ஜம்மூகாஷ்மீரில் தற்போது இயல்பு நிலை திரும்பிவருகிறது.
வெள்ளம் காரணமாக மாநிலத்தின் முக்கியசாலைகள் துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்தியபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி ஹெலிகாப்படரில் பார்வையிட்டார். அவருடன் பிரதம அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் உடன் சென்றார். வெள்ளம் பாதித்தபகுதிகளை பார்வையிட்ட நிதின் கட்காரி முதல்-மந்திரி ஒமர் அப்துல்லாவை சந்தித்து நிவாரணப்பணிகள் குறித்து பேசினார். சாலைகளை சீரமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதின்கட்காரி, காஷ்மீர் மாநில முதல்மந்திரி ஒமரின் கோரிக்கையை ஏற்று ரூ. 225 கோடி காஷ்மீருக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார். மாநிலத்தில் குடி நீர் பிரச்னையை தீர்க்கவும், தடைபட்டுள்ள குடிநீர் திட்டங்களை மீண்டும் செயல் படுத்தவும் மாநில அரசுக்கு உதவிகள் வழங்கப்படும். சாலைகள் சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 125 கோடி வழங்கப்படும். குடிநீர் வசதிகளை செய்துகொடுக்க ரூ. 60 கோடி வழங்கப்படும். ஜம்முகாஷ்மீரில் கட்டமைப்பு வசதிகளை சீரமைக்க முன்னுரிமை வழங்கப்படும். மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அனைத்து கூடுதல் உதவிகளையும் செய்யும். என்று நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.