நாங்கள் மாற்றுசக்தியாக உருவெடுத்துள்ளோம்

 தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அசாதாரணமான சூழல் நிலவிய போதும் நாங்கள் மாற்றுசக்தியாக உருவெடுத்துள்ளோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்..

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜக நம்பிக்கையோடு போட்டியிட்டது. இந்த தேர்தலில் நாங்கள் 2 அதிகார மையங்களை எதிர்த்துபோட்டியிட வேண்டியிருந்தது. ஒன்று ஆளுங் கட்சியினரின் அத்து மீறல், மற்றொன்று மாநிலதேர்தல் ஆணையத்தின் அலட்சியப்போக்கு. வேட்பு மனு தொடங்கிய நாள்முதலே எங்களது வேட்பாளர்கள் பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகினர் . இடைத் தேர்தலில் மிகப்பெரிய அசாதாரணமான சூழலை நாங்கள் சந்தித்தோம்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக அமைச்சர்கள், எல்லா இடத்திலும் பாஜக.,வை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் என்று கூறினர். ஆனால், நாங்கள் எல்லா இடத்திலும் டெபாசிட் பெற்றுள்ளோம். கோவை, ராமநாத புரத்தில் அதிக வாக்குகளை வாங்கியுள்ளோம். நாங்கள்பெற்றது சுத்தமான வாக்குகள். ஆனால் வெற்றி பெற்றிருப் பவர்களின் வாக்குகளோ கள்ளவாக்குகள். பணபலத்துக்கும் மன பலத்துக்கும் நடந்த இந்த தேர்தலில் நாங்கள் தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்று விட்டோம். மிரட்டல்களுக்கு பயப்படாமல் களப்பணி ஆற்றிய பாஜக.,வினருக்கும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த தேர்தலின் மூலம் தமிழகத்தில் பாஜக மாற்றுசக்தியாக உருவெடுத்திருப்பது உறுதியாகியுள்ளது என்று தமிழிசை கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...