மேக் இன் இந்தியா’ பிரசாரத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

 'மேக் இன் இந்தியா' பிரசாரத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, அதற்காக வடிவமைக்கப் பட்ட சிங்கம் 'லோகோ.,வை வெளியிட்டார்.

இந்தியாவில் தயாராகும் பொருட்களை உலகம்முழுவதும் அறியச்செய்யும் வகையில் "மேக் இன் இந்தியா" என்ற பெயரிலான பிரசாரத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்தவிழாவில் சர்வதேச மற்றும் இந்திய தொழிலதிபர்கள், தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேக்இன் இந்தியா பிரசாரத்தை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசும்போது, "முதலீடுகள் இந்தியாவை விட்டுச்செல்வதை மத்திய அரசு விரும்பவில்லை. அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறும் நிலை இருந்தது. இந்தியாவிலிருந்து எந்தநிறுவனமும் வெளியேற மத்திய அரசு விரும்பவில்லை. முந்தைய அரசின் கொள்கைகள்மீது அன்னிய நிறுவனங்களுக்கு அச்ச உணர்வு இருந்தது. மத்திய அரசின் கொள்கைகள் மீது இந்திய தொழில் துறை நம்பிக்கை வைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 120 கோடிமக்கள் மீது தொழில்துறை நம்பிக்க்கை வைக்கவேண்டும்.

நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல வெளிநாட்டு முதலீடுகள் அவசியம். அந்தவகையில் மத்திய அரசை பொறுத்தவரை எப்.டி.ஐ. என்பது 'ஃபர்ஸ்ட் டெவலப் இந்தியா' என்பதாகும். இந்தியாவில் தயாராகும் பொருட்களை உலகம்முழுவதும் அறிமுகப்படுத்துவதற்காக இந்த பிரசாரம். அரசியல் ஆதாயத்திற்காக இந்த பிரசாரத்தை மேற்கொள்ளவில்லை. மேலும், இந்தபிரசாரம் குறித்து விமர்சனங்கள் இருக்கின்றன. சலுகைகளால் எந்தபயனும் இல்லை. திறனை மேம்படுத்துவது குறித்து இளைய தலை முறையினருக்கு பயிற்சி அளிக்கவேண்டும்" என்றார்.

முன்னதாக வர்த்தகதுறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசுகையில், "மேக் இன் இந்தியா என்பதே நமது கனவுதிட்டம் ஆகும். இதனை நிறைவேற்ற வர்த்தக ரீதியிலான அனைத்து எளியவகைகளும் வழிசெய்து தரப்படும். தொழில் துவங்குவதில் யாருக்கும், எந்த ஒரு இடையூறும் இருக்காது

பிரதமரின் லட்சியதிட்டமான 'மேக் இன் இந்தியா' பிரசார திட்டம் இன்று துவக்கி வைக்கப்படுகிறது. புதிய நவீன தொழில்துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும். இந்தியாவில் தொழில்தொடங்கிட ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்துவங்க முன்வருவோருக்கு 72 மணி நேரத்தில் அனுமதி தரப்படும் .

அன்னிய முதலீட்டை பெருக்கிட போதிய நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன. தொழில் துவங்குவதில் இருக்கும் சிவப்பு அளவுகோல் அகற்றப்பட்டு சிவப்புகம்பள வரவேற்பு அளிக்ககப்படும்" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...