5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, ஐம்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். . இன்று நியூயார்க் சென்றடையும் மோடி, மாலையில், மாநகரமேயர் பில்-டி-பிளாசியோ, நோபல் பரிசு பெற்ற அறிஞர் எலியட் வார்மோஸ் ஆகியோரை சந்திக்கிறார்.
மறு நாள் நியூயார்க்கில் இரட்டைகோபுரம் தகர்க்கப்பட்ட நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நரேந்திர மோடி, அன்று பிற்பகல் ஐ.நா. சபையின் 69வது ஆண்டு கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர், ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களையு ம் பிரதமர் மோடி சந்தித்து, இருநாடுகளின் உறவுகுறித்து பேசுகிறார்.
ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன், உலகவங்கித் தலைவர் ஜிம் யோங்கிம் ஆகியோரையும் பிரதமர் சந்திக்கிறார். மாலையில், அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும், நியூயார்க் நகரமுன்னாள் மேயருமான மிச்செல் புளூம்பெர்க்கை சந்தித்து, நவீன நகரங்களை உருவாக்குவது தொடர்பான அவரது அனுபவத்தை மோடி கேட்டறிகிறார்.
பின்னர், வரலாற்று சிறப்புமிக்க சென்ட்ரல் பார்க்பகுதியில் நடக்கும் விழாவில் கலந்துகொள்ளும் மோடி, மேடிசன் சதுக்கத்தில் நடைபெறும் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்.
முன்னதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன், வெளியுறவு முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். 29ம் தேதி வாஷிங்டனில் அமெரிக்க தொழிலதிபர்களை சந்தித்து விட்டு வெள்ளை மாளிகைக்கு செல்லும் நரேந்திர மோடிக்கு, தனிப்பட்ட முறையில் ஒபாமா தேநீர் விருந்து அளிக்கிறார். தனது பயணத்தின் கடைசி நாளான 30-ம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் நரேந்திரமோடி அதிகாரப்பூர்வமாக சந்தித்து பேசுகிறார்.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.