மோடியும், ஒபாமாவும் இணைந்து கூட்டுத் தலையங்கம்

 பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இணைந்து பத்திரிகை ஒன்றுக்காக கூட்டுத்தலையங்கம் எழுதியுள்ளனர். இந்த தலையங்கம் நாளை இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பல தரப்பினரை சந்தித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார். அவரது உற்சாகமான செயல்பாடுகள் அங்குள்ள மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது..

பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் முடிவடையும் தருணத்தில், ஒபாமாவுடன் இணைந்து அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்காக கூட்டுத்தலையங்கம் ஒன்றை அவர் எழுதியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த கூட்டுத் தலையங்கம் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில், குறிப்பிட்ட பத்திரிகையின் பெயரை இருநாட்டு வெளியுறவு துறை அமைச்சகமும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சயீத் அக்பரூதீனிடம் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, "அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தங்களது தேர்தல் பிரச்சாரங்களில் தொழில் நுட்பத்தை மிகநேர்த்தியாக கையாண்டு மக்களை கவர்ந்தவர்கள் ஆவர்.

அவர்கள் சைபர் உலகில் வல்லவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை தங்களது நாடுகளுக்குக்கு நன்மைபயக்கும் விதத்தில் சில உடன்பாடுகளை விரைவில் மேற்கொள்வார்கள். அதற்காக நீங்கள் காத்திருங்கள்.

மேலும், இவர்கள் கூட்டுத்தலையங்கம் எழுதியுள்ளது உண்மைதான். இரு நாட்டு தலைவர்களும் இணைந்து தங்களது நாடுகளின் நிலைப் பாட்டை முதன் முறையாக எழுத்துப் பூர்வமாக இணைந்து எழுதியுள்ளனர். இது பிரதமரின் பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்" என்றார்.

அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பு , 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற பிரபல அமெரிக்க பத்திரிகைக்கு நரேந்திர மோடி தலையங்கம் எழுதியிருந்தது இங்கே நினைவு கூரத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...