மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: சீனாவில்லிருந்து கண்டெய்னர் கண்டெய்னராக பட்டாசுகள் இந்தியாவிற்கு வருகின்றன. அவை விலைகுறைவாக உள்ளன. அவற்றை பதுக்கி வைத்துக் கொண்டு பட்டாசுகள் கேட்கும்போது அவை விற்கப்படுகின்றன அதனால் சிவகாசி பட்டாசுகள் விற்பனை பாதிக்கப்படுகின்றன என்று புகார்தெரிவித்தனர்.
உடனடியாக மத்திய அரசு, இந்தபுகார் குறித்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது சீனா உள்ளிட்ட எந்த வெளிநாடுகளில் இருந்தும் பட்டாசுகளை இந்தியாவிற்குள் இறக்குமதிசெய்ய யாருக்கும் அனுமதி வழங்கவில்லை.
அந்த பட்டாசுகளால் விபத்து உருவாக வாய்ப்பு அதிகம். அந்த பட்டாசுகளால் பாதுகாப்பு இல்லை. எனவே சீன பட்டாசுகளை யார் வைத்து விற்றாலும் உடனே போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுங்கள். கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. காரணம் இது நீதிமன்ற தீர்ப்பு. பொதுமக்களை பாதிக்காத வகையில் சம்பவங்கள் நடக்க வேண்டும். பொதுமக்களின் முன்னேற்றத்திற்கு எதுவும் தடையாக இருக்க கூடாது. வன்முறை எங்கும் இருக்கவேண்டாம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.