நாக்பூரில் ஆர்எஸ்எஸ் இயக்க ஆண்டுவிழா மற்றும் தசராவிழாவில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசும் போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சரியான பாதையில் செல்வதாக பாராட்டி பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது;
தேசியபாதுகாப்பு , பொருளாதாரம், சர்வதேச உறவுகள் உள்ளிட்டவற்றில் குறுகியகாலத்தில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது.சர்வதேச அரங்கில் இந்தியா வலுவாக வளர்ந்துவருகிறது என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது என்பதற்கு சாதகமான அடையாளங்கள் தெரிகிறது. மக்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த அரசுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் வழங்கவேண்டும்.அதன் சிறந்த கொளைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமரிக்கபயணம் நமக்கு சாதகமாக அடையாளங்களை காட்டுகிறது.இது நாட்டு மக்களை ஒருபுதிய உற்சாகத்திற்கு கொண்டுசென்று உள்ளது.புதிய நம்பிக்கையின் வெளிச்சம் மக்கள் இதயங்களில் தோன்றி உள்ளது.அமெரிக்க பயணம் மற்றும் அமெரிக்க அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்காக நாடு முழுவதும் பெருமைபடுகிறது.
பசுவதை செய்வதையும், இறைச்சி ஏற்றுமதி செய்வதையும் தடுத்த நிறுத்தவேண்டும் மற்றும் சீன பொருட்களை பயனபடுத்த கூடாது.
ஜிகாதி நடவடிக்கைகள் கேரளா-தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது . வங்காள தேசத்தில் இருந்து மேற்குவங்காளம், அசாம், மற்றும் பீகாரில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களால் இந்து சமூகத்தின் வாழ்க்கை பாதிக்கபடுகிறது .என்று அவர் பேசினார்.
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.