சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் அதிமுக.வினர் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
அதிமுக. எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று சென்னை எம்.ஜி.ஆர். நினைவிடம் முன்பு உண்ணா விரதம் இருந்தனர். இந்த போராட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–
ஒருகட்சி தலைமை பாதிக்கப்படும் போது அந்தகட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் வேதனைப் படுவதும், ஆதரவு தெரிவிப்பதும் வழக்கம்தான்.
அந்த வகையில் தான் அதிமுக. எம்.எல்.ஏக்கள் தங்கள் வேதனையை தெரிவிக்க உண்ணா விரத போராட்டம் நடத்தலாம். எந்தபோராட்டம் நடத்துவதாக இருந்தாலும் மக்களுக்கு பாதிப்பு வராத வகையில் ஜனநாயக முறைப்படி நடத்துவது தவறல்ல.
அதேநேரத்தில் நீதிமன்றங்களையும், தீர்ப்பையும் எதிர்ப்பது முறையானதல்ல. ஒருவழக்கில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காத பட்சத்தில் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். அதுவும் தவறல்ல.
தமிழகத்தில் நீதிபதிகளின் உருவப்பொம்மைகள் எரிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இது நீதிக்கு இழைக்கப்படும் அநீதியாக கருதப்படுகிறது. இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான செயல் பாடுகளை தடுத்து நிறுத்த அரசு முன் வர வேண்டும்.
இந்தியாவை தூய்மையாக்குதல், அண்டை நாடுகளுடன் நட்புறவு உட்பட மக்கள்பாராட்டுகின்ற பல்வேறு நல்ல திட்டங்கள் அனைத்தும் காங்கிரஸ் கொண்டுவந்த திட்டங்கள் என்றும் அதை பா.ஜனதா காப்பியடிக்கிறது என்றும் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தினசரி அறிக்கை வெளியிடுகிறார். அவர்கள் கஜானாவைத்தான் தூய்மையாக்கினார்களே தவிர நாட்டை தூய்மையாக்க வில்லை. ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்தபோதும், தற்போதும் பொய் அறிக்கைகளை விட்டு மக்களை குழப்பி வருகிறார்.
என்று அவர் கூறினார்.
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.