தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவிவருகிறது. அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கி விட்டது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், 'மேலும் கூறியதாவது; ஜெயலலிதா மீதான வழக்கில் வந்துள்ள தீர்ப்பை யடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக வினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இது மட்டுமன்றி கடைகளை அடைக்கவேண்டும் என்று வியாபாரிகளை கட்டாயப்படுத்து வதாகவும் தெரிகிறது. ஒவ்வொரு நாளும் ஒருஅமைப்பினர் மற்றும் சங்கத்தினர் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்திவருகின்றனர். இது ஏன் என்று புரியவில்லை.
தமிழகத்தில் இன்று (நேற்று) தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதனால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆம்னி பஸ் உரிமையாளர்களும் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக கூறியுள்ளனர். பண்டிகை நேரத்தில் இப்படிச்செய்வதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
ஜெயலலிதாவுக்காக பலர் தற்கொலை செய்துகொள்வதாகவும் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் வருத்தமளிக்கும் செய்தி .
தமிழகத்தில் அசாதாரணமான சூழல் நிலவிவருகிறது. அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளது. ஒரு அரசியல் தலைவருக்காக எதை வேண்டு மானாலும் செய்யலாம் என்ற நிலை தொடரக் கூடாது. இது ஆபத்தான விஷயமாகும். அரசியல் தலைவர்களுக்காக பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது.என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறினார்.
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.