மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சியமைப்பதற்கு சிவசேனையின் உதவி தேவை இல்லை ' என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் தெரிவித்ஹ்டுள்ளார்.
இதுகுறித்து, பாஜக செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன், செய்தியாளர்களிடம் கூறுகையில், "மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய இருமாநிலங்களிலும் ஆட்சியமைப்போம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்' .
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கா விட்டால், சிவசேனை கட்சியிடம் பாஜக ஆதரவுகேட்குமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, "அப்படி ஒருசூழ்நிலை உருவாகாது. மகாராஷ்டிர மாநிலத்தை முதல்முறையாக பாஜகவின் முதல்வர் ஒருவர் ஆட்சிசெய்ய போகிறார்'
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனை தனித் தனியே போட்டியிட்டாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனை நீடிக்கிறது. அக்கட்சியைச் சேர்ந்த ஆனந்த்கீதே, மத்திய அமைச்சரவையில் கனரகத் தொழில் துறை அமைச்சராக உள்ளார்.
மும்பை மாநகராட்சியையும் பாஜக-சிவசேனை கூட்டணி தான் நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில், எங்களது அடுத்த இலக்கு, ஜார்க்கண்ட், பிகார் சட்டப் பேரவைத் தேர்தல்களை நோக்கி உள்ளது. அந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றும்.
ஹரியாணா மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு போட்டியாக, பிகார் முன்னாள் முதல்வர் நிதீஷ்குமார் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவரதுமுயற்சி பலனளிக்கவில்லை என்பது தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
முதலில், பிகார் சட்டப்பேரவை இடைத்தேர்தலில், கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலு பிரசாதுடன் கூட்டணி வைத்த நிதீஷ்குமார், பின்னர், முறைகேடு புகாரில் சிறை தண்டனை பெற்று வரும் ஓம்பிரகாஷ் செளதாலாவுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டார்.
இதன்மூலம், மக்களிடம் நம்பகத் தன்மையை நிதீஷ் குமார் இழந்துவிட்டார் என்று ஷாநவாஸ் ஹுசைன் கூறினார்.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.