தமிழகத்துக்கு கூடுதலாக கோதுமைவழங்க தயாராக உள்ளதாக மத்திய உணவு, பொதுவிநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
இந்திய உணவுக்கழக அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக வியாழக் கிழமை அவர் சென்னைவந்தார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாஸ்வான் பேசியது:
உணவுப் பாதுகாப்புச் சட்ட த்தினை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 11 மாநிலங்களில் இந்தச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தச்சட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளை பொருளாதார அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் பணிகளை மாநிலஅரசுகள் மேற்கொள்ளும்.
கடந்த அக்டோபர் 4-ம் தேதிக்குள் உணவு பாதுகாப்புச் சட்டத்தை அமலாக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது. தற்போது அந்தகால அவகாசம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய உணவுத்துறை அமைச்சராக நான் பதவியேற்கும்போது தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவியது.
ஒரு சிலநேரங்களில் குறிப்பிட்ட காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவது இயற்கையானது தான். அதே வேளையில் அத்தியாவசிய உணவுப் பொருள்களைப் பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது. தமிழகத்தின் தேவைக்கு கூடுதலாக கோதுமை வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு கூடுதலாக கோதுமையை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது.
அனைத்து மாநிலங்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு போதுமான உணவுப் பொருள்கள் கையிருப்பு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட விசாகப்பட்டினத்துக்கு கூடுதல் உணவுப்பொருள்களை வழங்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது.
நியாய விலைக்கடைகளில் அனைத்து நாள்களும் மக்களுக்கு தேவையான பொருள்களை வழங்கவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.