குறையொன்றுமில்லை-மறை மூர்த்தி| கண்ணா
குறையொன்றுமில்லை| கண்ணா
குறையொன்றுமில்லை| கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல்-நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும்-எனக்கு
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசம் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின் பின்-நிற்கின்றாய் கண்ணா – கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே| காண்பார் என்றாலும்
குறையொன்றும் எனக்கில்லை| மறைமூர்த்தி கண்ணா’ என்றாலும்
குறையொன்றும்| எனக்கில்லை மறைமூர்த்தி ‘கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்றாய வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக் கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாக கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.