31-ந் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம்

 பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நேற்று டெல்லியில், தமிழக பாஜ பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் பிரதாப் ரூடியை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பிறகு தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றுக்கட்சி பாரதீய ஜனதாதான் என்று நாங்கள் சொல்லி வருகிறோம். தமிழகத்தில் எங்கள் கட்சியை பலப்படுத்த, பொறுப்பா ளராக நியமிக்கப்பட்டு இருக்கும் ராஜீவ்பிரதாப் ரூடியின் வழிகாட்டுதல் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கைஉள்ளது.

தமிழகத்தில் பாஜக.,வுக்கு தற்போது 10 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கட்சிக்கு 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

தமிழக அரசு ஆவின்பால் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி இருக்கிறது. இதை எதிர்த்துவருகிற 31-ந் தேதி சென்னையில் பாஜ போராட்டம் நடத்த இருக்கிறது. அதைத்தொடர்ந்து நவம்பர் முதல்வாரத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும். பால்விலை உயர்வை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். ஆவின் நிறுவனம் வணிகநோக்கில் செயல்படக் கூடாது. சேவை நோக்கில் செயல்படவேண்டும்.

கூட்டணியில் இருப்பவர்கள் கருத்துகூற சுதந்திரம் இருக்கிறது. அதனை தெளிவுபடுத்தும் கடமை எங்களுக்கு இருக்கிறது. சிலகருத்துகளை கூறுவதனால் கூட்டணி உடைந்துவிட்டது என்று கூறமுடியாது. டெல்லியில் பிரதமரின் விருந்துக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப் படாததால் எங்களுக்குள் ஏதோ விரிசல் வந்து விட்டது என்பது போல சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். அது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

ரஜினி காந்தை நாங்கள் வலியப்போய் அழைக்கவில்லை. தேசிய எண்ணம் கொண்ட திரைப்பட கலைஞரான அவர் வந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் எங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டோம்.

ரஜினிகாந்த் மட்டுமல்ல. தேசிய எண்ணம்கொண்ட மற்ற நடிகர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள் என்று எந்தத் துறையில் இருந்தாலும் அவர்கள் எங்களுடன் இணையவேண்டும் என்று விரும்புகிறோம். நரேந்திர மோடியின் தலைமை, எங்கள் கொள்கை, எங்கள் தொண்டர்களின் அர்ப் பணிப்பு ஆகியவற்றை நம்பித் தான் எங்கள் கட்சி உள்ளது .

தமிழகத்தில் பாரதீய ஜனதா மிகப்பெரும் சக்தியாகமாறி அடித்தட்டு மக்களின் ஆதரவுடன் 2016-ல் பெரிய வெற்றியை பெற்று ஆட்சியைபிடிக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...