மராட்டியத்தில் புதிதாக பதவி ஏற்ற மந்திரி களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் போலீஸ், நகரவளர்ச்சி, வீட்டுவசதி, சுகாதார துறைகளை வைத்துகொண்டார். சுதீர் முங்கண்டிவாருக்கு நிதித் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதன் விவரம் வருமாறு:–
முதல்–மந்திரி
1. முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் – போலீஸ், நகரவளர்ச்சி, வீட்டுவசதி, சுகாதாரம்.
2. ஏக்நாத் கட்சே:– வருவாய், சிறுபான்மை யினர் மேம்பாடு, வக்பு, விவசாயம், கால் நடை, பால்வளம், மீன்வளம் மற்றும் கலால் துறை.
3. சுதீர் முங்கண்டிவார்: – நிதி, திட்டம், வனத் துறை.
4. வினோத் தாவ்டே: – பள்ளிக்கல்வி, உயர் கல்வி, தொழில் மற்றும் மருத்துவகல்வி, விளையாட்டு, மராத்தி மொழி மற்றும் கலாசாரம்.
5. பிரகாஷ் மேத்தா:– தொழில் மற்றும் சுரங்கம். பாராளுமன்ற விவகாரம்.
6. சந்திரகாந்த் பாட்டீல்:– கூட்டுறவு, சந்தை, ஜவுளி, பொதுப் பணி.
7. பங்கஜா முண்டே:– கிராமவளர்ச்சி, தண்ணீர் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்.
8. விஷ்ணு சவரா:– பழங்குடியினர் மேம்பாடு, சமூகநீதி, சிறப்பு உதவிகள்.
இணை மந்திரிகள்
9. திலீப் காம்பிளே:– பழங்குடியினர் மேம்பாடு, சமூக நீதி, சிறப்பு உதவிகள்.
10. வித்யா தாகூர்:– கிராம வளர்ச்சி, தண்ணீர் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்.
பாக்ஸ் கிராம வளர்ச்சி இலாகாவை விரும்பிய பங்கஜா முண்டே.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.