தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடுபடுவேன்

 மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு தேசிய நெடுஞ் சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் திங்கள் கிழமை பொறுப்பேற்று கொண்டார்.

பிரதமர் நரேந்திரமோடி தனது அமைச்சரவையை ஞாயிற்றுக்கிழை விரிவாக்கம் செய்தார். இதை தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் புதிதாக 21பேர் சேர்க்கப்பட்டனர். தவிர, அமைச் சரவையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டன.

அதன்படி, மத்தியகனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் இணை அமைச்சராக பதவிவகித்து வந்த தமிழகத்தை சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணனுக்கு, தேசியநெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

பொன். ராதாகிருஷ்ணன் வகித்துவந்த பதவி ஜித்தேஸ்வராவுக்கு வழங்கப்பட்டது.

இதைதொடர்ந்து , புது தில்லி நாடாளுமன்ற சாலையில் போக்குவரத்து பவனில் உள்ள தேசியநெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்த பொன். ராதாகிருஷ்ணன் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் , "சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மூலம் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடுபடுவேன். அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வேன். அடல்பிகாரி வாஜ்பாய் தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்ற போது நெடுஞ் சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மூலம் பலபணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று, பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தற்போதைய அரசும் பல்வேறு மகத்துவமிக்க சாதனைகளை செயல்படுத்தும்' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.