ஹரியானா மாநிலத்தில் சோனியா காந்தியின் மருமகன் வதேராவின் நிலபேர ஊழலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
.
ஹரியானா மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா வுக்கு சொந்தமான நிறுவனம் ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி. இந்த நிறுவனம் 2008ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் சிகோக்பூர் கிராமத்தில் 3 ஏக்கர் நிலத்தை 7.5 கோடிக்கு வாங்கியது.
இந்தநிலத்தில் 2.71 ஏக்கரில் வர்த்தக குடியிருப்பு அமைக்க ஹரியானா மாநில நகர்ப்புற திட்டத் துறை அனுமதி அளித்தது. அப்போது வதேராவின் நிறுவனம் டிஎல்எப் என்ற கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. வதேரா 7.5 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலத்துக்கு டி.எல்.எப் நிறுவனம் ரூ.58 கோடி வழங்கியது. 2012-ம் ஆண்டு நில பரிமாற்றம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதனை தல்பீர்சிங் என்ற அதிகாரி பதிவுசெய்து உத்தரவு பிறப்பித்தார். ஆனால், பதிவாளர்துறை ஐஜியாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி கெம்கா இதனை ரத்துசெய்து உத்தரவு பிறப்பித்தார். அவர் தான் வதேராவின் ஊழலை அம்பலப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கெம்காவின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த ஹரியானா அரசு நேர்மையான அந்த அதிகாரியை பந்தாடியது. அவர்மீது பல நடவடிக்கைகளையும் எடுத்தது.
கெம்கா மாற்றப்பட்டதை தொடர்ந்து தல்பீர்சிங் அந்த நிலபேரத்துக்கு மீண்டும் அங்கீகாரம் அளித்தார். கெம்கா அதிகார வரம்பிற்குள் இந்தபிரச்சனை வராது என்றும் அவர் ரத்துசெய்தது செல்லாது என்றும் அரசு நியமித்து மூவர்குழு தெரிவித்தது. கெம்கா பிறப்பித்த உத்தரவு சட்ட விரோத மானது, செல்லாது என்று அவர் கீழ் பணியாற்றிய தல்பீர்சிங் என்ற அதிகாரி அவருடைய உத்தரவை ரத்து செய்தார்.
இந்த சாதாரண அதிகாரிக்கு இவ்வளவு அதிகாரம் எப்படிவந்தது. ஹரியானா மாநில அமைச்சர் ஒருவரின் உறவினர் என்பதுதான் அவரின் அத்துமீறிய செயல்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.இந்தநிலையில் ஹரியானா மாநிலத்தில் பாஜக அரசு பதவியேற்றுள்ளது . சர்ச்சைக்குரிய அதிகாரி தல்பீர்சிங்கை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அவர்மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு வேறொரு நிலபேர ஊழல் தான் காரணம்.
குர்கான் மாவட்டத்தில் ரோஜ் கார் குர்ஜார் என்ற கிராமத்தில் இருந்த நிலம் தொடர்பாக அவர் ஒருகணக்கு தணிக்கையாளருக்கு சாதகமாக சட்ட விரோதமாக நடந்து கொண்டதாக மேலதிகாரிகள் புகார்கள் தெரிவித்தனர். குர்கான் துணை ஆணையர் கொடுத்தபுகாரை தொடர்ந்து அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், கைதும் செய்யப் பட்டுள்ளார்.
மாநில நிதியமைச்சர் கேப்டன் அபிமன்யூ இந்த செய்தியை உறுதிசெய்தார். நிலபேர ஊழல் தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அபிமன்யூ தெரிவித்தார்.வதேராவுக்கு உதவிய இந்த அதிகாரி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து வதேராவுக்கு நிலம்வழங்கி பிறப்பித்த உத்தரவும் ரத்தாகுமா என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.