காஷ்மீர் மாநில சட்டசபைக்கு வரும் நவம்பர் 25ம் தேதி முதல் அடுத்த மாதம், டிசம்பர் 25ம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. 5 கட்டமாக நடைபெறும் இந்ததேர்தலுக்கு 7, தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருபதால், பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
இந்ததேர்தலில் வெற்றிபெற்று, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று மிஷன்–44 என்ற பெயரில் பாஜக. தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
பாஜக.வை எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிகள், 87 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளன. இதனால் காஷ்மீர் மாநிலத்தில் பாஜக., காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிகளிடையே 4 முனைப்போட்டி உருவகியிள்ளது.
காஷ்மீரில் தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்துவருகிறது. இங்கே வெற்றி பெற பிரதமர் மோடியின் பிரசாரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் நாடுதிரும்ப உள்ளார்.
அதன்பிறகு வரும் 22ந் தேதி (சனிக் கிழமை) அவர் காஷ்மீரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். அன்று அவர் கிஷ்ட் வார் நகரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
27–ந் தேதி ஸ்ரீநகர் மண்டலத்திலும், 30–ந் தேதி உதம்பூர் மண்டலத்திலும் பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். மொத்தம் 6 பொதுக்கூட்டங்களில் மோடி பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.